Re:...சந்தா பாக்கி அதிர்ச்சி அளிக்கிறது. posted bymackie noohuthambi (kayalpatnam )[12 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44426
2,27,000 ரூபாய் சந்தா பாக்கியா? அதிர்ச்சி அளிக்கிறது.
பொதுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசிய போது வருடா வருடம் பொதுக் குழு கூடும்போதெல்லாம் நிர்வாக செலவு பற்றாக்குறைக்கு இங்கு வசூல் செய்கிறீர்களே, கூட்டத்துக்கு வரவே பயமாக இருக்கிறது, கூட்டம் கூடுவதே இதற்காகத்தானா என்று கேட்க வேண்டிய தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.
முன்கூட்டி செலவுகளை திட்டமிடல் என்ற FORECAST திட்டம் இல்லையா என்று ஒரு சகோதரர் கேட்டார். அப்போது கூட இவ்வளவு சந்தா தொகை பாக்கி இருப்பதாக நாம் அறியவில்லை. நல்லதொரு நிர்வாகம் கல்விக்கான பணத்தை எல்லா காயல் நலமன்றங்களும் கண்ணை மூடிக் கொண்டு இக்ராவுக்கு வழங்குகிறார்கள் என்றால் அதன் நம்பகத்தன்மை வெளிப்படையான கணக்கு விவரங்கள். இங்கு யாரும் பயப்படாமல் எந்த கேள்வியும் கேட்க முடிகிறது. மற்ற இயக்கங்களில் ஜமாத்துகளில் கட்சிகளில் யாரும் இப்படி கேள்வி கேட்டால் உடனே து ஆ ஓதுங்கள் என்று பேச்சை முடிவுக்கு கொண்டு வருவதை தான் நான் பார்த்திருக்கிறேன்.
எனவே தயவு செய்து இந்த சந்தா தொகை நிலுவையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் தேட வேண்டும். யோசனை சொல்வதால் இவனுக்கு வேறு வேலை இல்லை, என்ன மாற்று வழி என்பதை சொல் என்று நீங்கள் கேட்பது விளங்குகிறது. ஆனாலும் பொறுப்பு மிக்க நன்கு படித்த அனுபவமுள்ள ஆடிட்டர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள்தான் அதற்கு மாற்று வழியை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனம் தனது அன்றாட செலவுகளை முதலாவது சரி செய்து கொள்ள வேண்டும். அதில் ஓட்டை விழுந்தால், பானை ஓட்டை, நாங்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருப்போம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
வந்து சேரும் பணம் என்னவோ காற்றில் மிதந்து வருவதில்லை. அவரவர்கள் கொடும் வெயிலிலும் கொட்டும் குளிரிலும் இருந்து தங்கள் உடலை வருத்தி சம்பாதித்த பணம். ADMINISTRATION செலவுகள் கட்டுப் படுத்தப் படவேண்டும் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் சிக்கனமாகவே செலவு செய்கிறார்கள் என்று அவர்கள் ஆண்டறிக்கை சான்று பகர்கிறது. எனவே சந்தா வசூலை துரித படுத்த எல்லோருடைய மின்னஞ்சல் விலாசமும் இக்ராவில் இருக்கிறது. அவர்களுக்கு இந்த செயற்குழு கூட்டறிக்கையை அனுப்புங்கள். வீடு தேடிப் போய் வசூல் செய்வது சாத்தியமில்லை.பெண்கள் தவறான தகவல்களை தங்கள் கணவன்மார்களுக்கு சொல்லி விடுவார்கள். பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்கள் சந்தாதாரய்ப் பற்றி வீண் பஸாதுக்களை கிளப்பி விடுவார்கள் அது இக்ராவின் நலனை பாதிக்கும். நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். எனது கருத்து பதிவில் தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் பதிவு செய்வது எனது சொந்த கருத்துதான். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் கருத்து இருக்கும். எனது கருத்துடன் உடன்பாடும் இருக்கும் முரண்பாடும் இருக்கும். நான் சொல்வதுபோல் தீர்ப்பை எழுதுங்கள் என்று நீதிபதியிடம் சொல்ல முடியாது அதே நேரம் நீதிபதி தன் இஷ்டப்படி மக்கள் உணர்வுகளுக்கு எதிராக தீர்ப்பு எழுதவும் கூடாது. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து தீர்ப்பு எழுதுவது சான்றோருக்கு அழகு.
பல விஷயங்களை மனம் திறந்து விவாதிக்க இக்ரா களம் அமைத்துக் கொடுக்கிறது. உங்கள் சேவைகள் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross