தீய உணர்வான வேலண்டைன்சிற்கு வெள்ளைக்கொடிக்காட்டும் ஊடகங்கள் உதிரம்சிந்திய தூய நெறிஉணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது.
உறங்கிக்கொண்டிருக்கும்போது பெற்ற சுதந்திரம் உறக்கம் வராதபோது விழிக்கச்செய்திருக்கிறது ஆசிரியர் அவர்களை.
இப்படி நம்மில் எப்போது விழிப்புணர்வைத்தரும்?
முஹம்மதலியும் சவுக்கத்தலியும் மட்டுமல்ல எத்தனையெத்தனையோ எம்குல ஆண்,பெண் வீரர்கள் வெள்ளைஎத்தர்களை விரட்ட வரிந்துகட்டவில்லையென்றால் நமக்கு நிரந்தர வயிற்றுவலியாக,தலைவலியாக இருந்திருக்கும்.
பிறந்து மண்ணின்மகிமையை உயர்த்தியவர்களை அந்நியர்களென பதாகையேந்தும் பாதகர்கள் அன்று அந்நியனிடம் கையேந்தியவர்கள் இன்றுபிரிவினைவாதம் பேசுகிறார்கள் மதச்சாயம்பூசி மொழுகப்பார்க்கிறார்கள்.
ஒட்டுண்ணிகள் என்றும் ஒட்டுண்ணிகளே.
“அவுரங்கசீப் எல்லாம் மிகமிக சீப்பாக வர்ணிக்கப்படுகிறார்கள் இந்தியாவில் கல்வியில் விழிப்புணர்வை ஏர்படுத்தியரே அவர்தான் .திப்புசுல்தான் ஆங்கிலேயர்களை விரட்டிவிரட்டியே காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரைவிட்டார் ஒப்பில் வீரன் திப்பென்று உப்புசப்பிற்கு சொல்லிக்கொள்கிறோம் விடுதலைப்போராட்டத்திற்காக
ஏராளமான பொண்ணும்பொருளும் சொத்தையும் தந்தே ஏழையாகிவிட்ட ராமநாதபுரம் அமீரஹம்சா மாஷா அல்லாஹ்
இந்தியாவின் முதல்சுதந்திரப்போராட்டவீரர் மருத நாயகம் அடுக்கிகொண்டேபோகலாம்
குற்றம் நமதே நாம் மீன்குஞ்சுகளாகவே வளர்க்கப்பட்டுவிட்டோம் நமதுகடலின் ஆழம் பற்றிநமக்கு அறிவூட்டப்படவில்லை நமக்குசுதந்திரம் கிடைக்க நாம்கொடுத்த இழப்பை நம் உணர்வில் ஊட்டப்படவில்லை பள்ளிப்பாட நூல்களிலும் தடயங்களில்லாத தடவப்படும் தகவல்கள்தரப்பட்டன பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிட்டன
இதைஅன்றிருந்தவர்களும் கேட்கவில்லை அரசுபாடப்புத்தகங்கள் மறைத்ததை நம்முன்னோர்கள் பள்ளிகல்லூரிகளிலும் தீன்வழிக்கல்விச்சாலைகளிலும் அதைக்கற்றுத்தந்து, உணர்வுகளுக்கு வலுவூட்டியிருக்கவேண்டும் இன்னும் இன்றும் நமக்கு இந்தசமூக ஊடகங்கள் வரவில்லையென்றால் நசுக்கப்பட்டுக்கொன்டே இருப்போம் இதுவரைவந்த எல்லாஅரசியல் ஆட்சியாளர்களுக்கும் ஓட்டுவங்கியில்மட்டுமே ஒட்டுமொத்தபார்வையுமிருந்தது நம் உணர்வுகளின்பால் இருந்ததாகவே இல்லை.
நம்மை ஏன் மீன்குஞ்சு என்று குறிப்பிட்டேனென்றால் அது எந்தநீரிலும் நீந்தும் ஆனால் தான் நீந்திக்கொண்டிருக்கும் நீரின் அருமை அதற்குத்தெரியாது அதாவது நமதுமார்க்கத்தின்வலிமை நமக்கு இன்னும் புரியவில்லை ஆனால் புதிதாக இந்த தீனுல் இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அதனுடைய ஆழமும் அடிப்படையும் நன்றாகவிளங்கியே வருகிறார்கள் அதுபோல் சுதந்திரம்பெற்றவலியை உணர்ந்திருந்தால் இன்று துவேஷமாகப்பேசப்படுவதற்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியிருக்கமாட்டோம்.
ஒவ்வொரு விடுதலை நாளுக்கும் கொடியேற்றி இனிப்புகள்வழங்கி வெறுமனே விடைபெறுகின்றன விடுதலைநாட்கள்.
இனியேனும்செய்வோமா கல்வியில் நமது சுதந்திரதியாகங்களென்னென்ன நம்குழந்தைகளுக்குக்கற்றுக்கொடுப்போம் சுதந்திரமாக,வாகனங்களும்,கணினிகளும் வாங்கித்தரும் நாம் இன்ஷா அல்லாஹ் உண்மையான சுதந்திரம்பெற்றவரலாற்றையும் கற்றுக்கொடுப்போம் அரசுக்கு இது அறிவுறுத்தப்படவேண்டும் திரித்து எழுதப்பட்டவைகள் திருத்தி எழுதப்படவேண்டும்
நம்மக்கள் நிறையப்படிக்கின்றனர் நிறைய நூல்களைப்படித்து பட்டங்கள் வாங்கி நிறைத்து நூல்கட்டி பட்டம்விடவா கல்வி?
அந்தப்பட்டம் சீராகப்பறக்கவேண்டுமென்றால் அதன்கீழ் வால் கட்டியிருக்கவேண்டும் இல்லையென்றால் கடிவாளமில்லாத குதிரைதான் படிப்பதை சுதந்திர வேட்கையோடுபாடிப்போம்
நமதுகுதிரையின்கடிவாளம் நம்மிடமிருக்கட்டும்.
இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் நமுக்குள் ஒற்றுமையையும் ஈமானையும் உறுதியாக்கித்தருவானாக ஆமீன்
ஆசிரியரவர்களால் சிறிதாகத்தரப்பட்ட கட்டுரை பெரும்தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் எளியநடை சுதந்திரதாகம்,அதை பெற்றுத்தந்தவர்களின் பெருமைகாணப்பபடவேண்டுமென்ற தாக்கம் உங்கள்தூக்கம் கலைத்திருக்கிறது இன்னும் எழுத்துக்களில் அதிவிவேகவேகம் காணப்படுகிறது தொடரட்டும் தொய்வில்லாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross