குழந்தைப்பருவத்திலிருந்து வாலிபப்பருவமெய்தியபின்னும் மழையோ,வெயிலோ,பனியோ வீடுவிட்டால் அறிவைத்தேடி ஒதுங்குமிடம் பள்ளிகல்லூரிகளாகும் அவைபன்முக அறிவுதரும் ஒருசரணாலயம்
ஒலியின்வழியில் பிறப்பதுமொழி அந்த மொழியின்வழியை பெரும்பாலும் ஒலியாலும் விழியாலும் அறியமுடிகிறது அப்படி அறிய மக்களுக்கு பொக்கிஷமாய் அமைவதுதான் கல்விக்கேந்திரமெனும்சோலை
அந்தச்சோலையில் ஆலமரங்களாக,விழுதுகளாக ஆசிரிய,ஆசிரியைகள்
கல்விக்கொடையாக அவர்கள்வழங்கும்நிழல் பறக்கக்கற்று பறைவைகளாகமரத்தின்மீது அமர்வதும், குசும்புச்செயல்களுடன் விழுதுகளைப்பிடித்துத்தொங்குவதும் மாணவமாணவியர்களின் அணுகுமுறையிலிருக்கிறது கொஞ்சம்கொஞ்சமாக குயில்களாக கூவக்கற்றுத்தேர்ந்து சிறகடித்துப்பறக்கிறோம்
அப்படிக்குயிலாக்கப்பறந்த நாம் நமக்கு காகங்களாக இருந்து தாகம்தீர்த்த குருக்களை நினைவுகூர்கிறோமா அந்த அறிவுத்தடாகங்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்திருக்கிறோம்
தொப்பூழ்க்கொடி அறுந்தபின்னும் தாய்மைஉறவுமாறாமல் நிலைக்கிறது ஆனால் ஆயிரக்கணக்கில் உறவுகள்கண்டஆசிரியமாணவவுறவுகளில் ஏனோ முற்றிலுமாக அறுந்துவிடுகிறது ஓரளவிற்காவது நிலைத்திருக்கவேண்டுமல்லவா
இன்னும் நம்மில் இரண்டுதலைமுறைகள் கடந்தபின்னும் அந்தமரத்தின் விழுதுக்கும் நிழலுக்கும் இன்னும்நாம் மறக்கமுடியாத எண்ணத்தால் ஏங்கத்தான் செய்கிறோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross