Re:...முக்தார் அஹமத் அவர்களை தெரியாது ஆனால் அரபி ஹாஜியாரை தெரியாது என்று சொல்ல தெரியாது posted bymackie noohuthambi (kayalpatnam )[08 November 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44871
சகோதரர் ஹபீப் முஹம்மது அவர்களின் ஆக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்தார் அஹமத் அவர்களை விழித்து எழுதியிருந்தால் அந்த ரசனையோடு இருந்திருக்கலாம். ஆனால் அரபி ஹாஜியாரை தொட்டு எழுதும்போது எனது அனுபவங்களை சொல்லாமல் முடியாது தலை வெடித்து விடும்.
எங்கள் வீட்டுக்கு MACKIE HOUSE என்று பெயரிட்டு அதை செதுக்கியவரும் அவரே எனது தம்பியின் வீட்டுக்கு ''இனிய இல்லம்'' என்று தமிழ் மொழியில் பெயரிட்டு செதுக்கியவரும் அவரே. பெயர்தான் அரபி ஹாஜியார் தவிர அவர் பல மொழிகளிலும் செதுக்குவார் அப்படியே நம்மையும் வார்த்தை ஜாலங்களால் செதுக்குவார்.
அவர் எனக்கு அறிமுகமானது ஒரு மைய்யித்து காட்டில் .. என்ன யோசிக்கிறீர்கள், நான் ஜனாஸாவாக இருக்கவில்லை, ஆனால் ஜனாஸாக்களுக்கு மீஜான் கால்கள் நட்டுவார்களே அதில் இவர் கை வண்ணம் ஜொலிக்கும் ஒரு வேளை கபரில் இருப்பவர் இதை காண நேரிட்டால் அவரே ஒரு கணம் அசந்து விடுவார். நான் மீண்டும் மீண்டும் சாகவேண்டும் இவர் மீண்டும் மீண்டும் என் மண்ணறை மீஜானில் எழுத வேண்டுமே என்று ஏங்கி நிற்பார்கள்...
சரி, என் வீட்டுக்கு பெயர் பொறிக்க வேண்டும் அரபி ஹாஜியார் என்று ஒருவராமே அவர் எங்கே இருப்பார் என்று ஒருவரிடம் கேட்டேன் ''நேரா போய் அந்த பெரியப்பள்ளி மையவாடியில் பாருங்கள் அங்கே இருப்பார்!...என்னது மௌத்தா போய்விட்டார்களா என்றேன்.இல்லைங்க மீஜானில் பெயர் வெட்டி எழுதிக் கொண்டிருப்பார். ஆச்சரியமான விலாசம்.
நானும் போனேன். அதுதான் உண்மை. கடைசியில் அவர் வீட்டுக்கு போனேன். இந்த வயதில் இந்த வேலை எப்படி இவரால் முடிகிறது. உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா யார் சொன்னது சிறப்பாக ஆண் மக்களும் பெண் மக்களும் இருக்கிறார்கள். அப்படியானால் நீங்கள் ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள். யார் சொன்னது கஷ்டப்படுகிறேன் என்று நான் இஷ்டப்பட்டு செய்யும் தொழில் இது. இந்த எழுத்துக்கள் வெட்ட எவ்வளவு வேண்டும். 350 ரூபாய் வேண்டும் . மனதுக்குள் இவ்வளவு சீப் ஆக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டு ஏங்க இதுக்கு இவ்வளவா பேசாம இந்த வேலைக்கே வந்துடலாம் என்று நினைக்கிறேன் என்றேன்.
நாம் யாரிடம்தான் பேரம் பேசுவதில்லை. மையத்துக்கு குழி வெட்டி நம்மை அழகாக உள்ளே அடக்கி இனிமேல் வெளியே வராத அளவுக்கு கச்சிதாமாக அடக்க உதவுகிறார் மய்யித்து குழி வெட்டுகிறவர் அவரிடம் கூட நாம்தா பேரம் பேசுகிறோம். நடக்கிறதா இல்லையா நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள்.
தாராளமாக வாருங்கள். யாரும் இதைக் கற்றுக்கொள்ள வரமாட்டேங்கிறாங்களே என்று ஆதங்கப்பட்டார். ஆமா இதுதானா வேலை, கட்டடத்துக்கு மேலே ஏறி அண்ணாந்து பார்த்துக் கொண்டு....கால் தவறி விழுந்தால் இவர்தான் நமக்கு மீஜானில் பெயர் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து வேலைகளை கச்சிதமாக முடித்துக் கொண்டேன். அவர் தேர்ந்தெடுக்கும் நேரம் வைகறை பொழுது சுபுஹு தொழுதுவிட்டு வருவார், வெயில் ஏறுமுன் இறங்கவேண்டும். அது முடியாது என்றால் அவருக்கு ஒரு கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். கூட நின்று பார்க்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை, பார்த்தால்தான் என்ன விளங்கும் என் போன்ற ''ஆம கால்க்குக்கு ''
முற்காலத்தில் தங்கள் தொழில் ரகசியங்களை இலகுவில் பெற்ற பிள்ளைக்கு கூட சொல்லிக் கொடுக்கமாட்டார்கள் இப்போதும் அப்படித்தான் ஆனால் இவர் கூவிக் கூவி நம்மை அழைக்கிறார், நம்மால் முடியவில்லை. அலைபேசியிலும் முக நூலிலும் முகத்தை புதைத்துக் கொண்டு பஸாது நிறைந்திருக்கும் வாட்சப்பில் நமது பொழுது களை வீணாக கழித்துக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் சிந்திப்பார்களா...
வாழ்வதற்கு பொருளும் வேண்டும்
வாழ்வதில் பொருளும் வேண்டும்.
அல்லாஹ் அரபி ஹாஜியார் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. முக்தார் அஹமத் அவர்களுக்கும் அருள் புரிவானாக. நாம் இப்படியே இவர்களை போன்றவைகளை புகழ்ந்து கொண்டு இவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டு விருதுகள் வழங்கி கொண்டே நமது வாழ்வை ஓட்டி விட வேண்டியதுதான்.
அவசியம் அரபி ஹாஜி அவர்ளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். ''நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மகால் கட்ட வேண்டாம் நான் இருக்கும் காலத்தில் எனக்கு நிம்மதியாக வாழ ஒரு குடிசை கட்டி தாருங்கள்'' என்று ஒரு கவிஞன் பாடுகிறான் அது இந்த அரபி ஹாஜிக்காகத்தானோ என்னவோ
முந்துங்கள்...ஹபீப் முஹம்மது அவர்களின் முயற்சிக்கு நானும் தோள் கொடுக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross