Re:...A SMALL STEP FORWARD பட் A கிரேட் LEAP FOR INDIAN ECONOMY posted bymackie noohuthambi (kayalpatnam )[09 November 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44872
A SMALL STEP FORWARD BUT A GREAT LEAP FOR INDIAN ECONOMY.
இதனாலெல்லாம் கறுப்பு பணம் ஒழிந்து விடுமா கறுப்பு சந்தை அழிந்து விடுமா இப்படி எல்லோரும் கேட்கிறார்கள். ஒழியுமா ஒழியாதா அழியுமா அழியாதா என்பதல்ல இங்கு பிரச்சினை. அப்படி ஒழிக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில் காலை முன்னால் எடுத்து வைத்திருப்பவரை நாம் பாராட்ட வேண்டாமா குறைந்த பட்சம் அதை பற்றி குறையாக பேசாமலாவது இருக்கலாம்.
ஓங்கி வளர்ந்து நின்று விழுதுகள் விட்டிருக்கும் ஆல மரம்தான் இந்த கறுப்பு சந்தையும் கறுப்பு பணமும் அதை அவ்வளவு இலகுவில் வேரோடு பிடுங்கி எறிய முடியாதுதான். அரசு அலுவலர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் உள்ளவர்கள் நீதியை உரக்க சொல்லும் நீதிபதிகள் எல்லோரும் ஏதோ வகையில் இந்த கறுப்பு விஷயத்தில் சிக்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் என்னதான் செய்வது. ஒரு முயற்சியாவது செய்து பார்க்கிறாரே'....
நாம் வெளியிலிருந்து ''இந்த நாடு எப்படி உருப்படும் லஞ்சத்திலும் ஊழலிலும் கறுப்பு பணத்திலும் முதலிடம் வகித்து கொண்டிருக்கிறது, சிங்கப்பூரை பாருங்கள் அதை பாருங்கள்'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர அந்த நாடுகளை போல் நம் நாட்டையும் மாற்ற நாம் செய்யும் பங்களிப்பு என்ன என்று எண்ணிப் பார்ப்பதில்லை.
பொது சிவில் சட்டம் என்று ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சித்தார் நாம் எல்லோரும் எதிர்த்தோம் அயோத்தியில் கோயில் கட்டுவோம். என்கிறார் எதிர்த்தோம்... அதை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு இந்த அஸ்திரத்தை இப்போது அவர் கையில் எடுத்திருக்கிறார்.
இது இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவர் எடுத்திருக்கும் ஆயுதம். அது அவரது அரசியல் ஆதாயத்துக்காக கூட இருக்கலாம். ஏதோ ஒரு விழிப்புணர்வுக்கு ஒரு கோடு போட்டிருக்கிறார்.
கார்போரேட்டுக்கள் அம்பானிகள் டாட்டா பிர்லாக்கள் என்ற பெருங்கொண்ட பணமுதலைகளின் கைகளில் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு பிரதமர் இப்படி ஒரு முடிவை அறிவித்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.
இத்தனை சக்திகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அவருக்கு ஏதாவது செய்துவிட்டுப் போக மாட்டோமா இன்னும் 3 வருடங்களில் என்ற நப்பாசை சராசரி பிரதமருக்கு இருப்பதில் தவறில்லை. ...
நேரு முதல் மன்மோகன்சிங் வரை செய்யாத ஒன்றை நாம் செய்கிறோம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் இது போல் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பல முறை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பிலிருந்து மீண்டும் சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை போல் இந்த கறுப்பு பணம் கறுப்பு சந்தை கள்ள நோட்டு நாட்டில் வலம் வரத்தான் செய்கிறது. அரசு மட்டும் இதை ஒடுக்க முடியாது. மக்கள் சக்தியும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் இந்த முயற்சி முழு வெற்றி பெறும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross