இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இன்று இரவு 8 மணியளவில், தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:
(1) இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
(2) நாளை (நவம்பர் 9; புதன்கிழமை) வங்கிகள் விடுமுறை
(3) நாளையும் (நவம்பர் 9), சில இடங்களிலும் நாளை மறுநாள் வரையிலும் (நவம்பர் 10) - வங்கிகள் நோட்டுகளை மாற்ற வசதியாக - ஏ.டி.எம். கருவிகளை பயன்படுத்த முடியாது
(4) நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை - 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, தொகை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, எவ்வளவு அளவிற்கும் - உங்கள் வங்கி கணக்கிலோ, அஞ்சல் நிலைய வங்கி கணக்கிலோ, டெபாசிட் செய்யலாம்.
(5) நவம்பர் 24 வரை - 4000 ரூபாய் அளவிற்கு மட்டும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்து, புதிய நோட்டுகள் மாற்றிக்கொள்ளலாம். அப்போது - பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்று ஏதாவது அடையாள அட்டையை சமர்ப்பிக்கவேண்டும்.
(6) வங்கி கணக்கில் இருந்து தினமும் 10,000 ரூபாய் வரையிலும், வாரத்திற்கு 20,000 ரூபாய் வரையிலும் எடுக்கலாம்
(7) ஏ.டி.எம். கருவிகள் செயல்பட துவங்கிய பின்பு, சில தினங்களுக்கு - தினமும் - ஒரு அட்டையில் இருந்து ரூபாய் 2000 மட்டும் எடுக்க முடியும்; பின்னர் அது 4000 ரூபாயாக உயர்த்தபப்டும்
(8) டிசம்பர் 30 க்கு பிறகு மார்ச் 31, 2017 வரை - பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியில் மட்டும், அதற்குரிய படிவத்தை நிரப்பி மாற்றிக்கொள்ளலாம்.
(9) நவம்பர் 11 (அடுத்த 72 மணி நேரத்திற்கு) வரை, அரசு மருத்துவமனை, அதில் உள்ள மருந்தகங்கள், ரயில், பஸ் மற்றும் விமான டிக்கெட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள், அரசு நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகள், மயான ஸ்தலங்கள் ஆகியவற்றில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும்
(10) 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து நோட்டுகள், நாணயங்கள் (COINS) தொடர்ந்து செல்லும்
(11) இணையம் மூலமாக பண பரிமாற்றம் (INTERNET BANKING), காசோலை வழங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டுகள் பயன்பாடு போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை
(12) புதிதாக 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
|