காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு 02.45 மணிக்குத் துவங்கி தற்போது (நண்பகல் 12.00 மணி) வரை, சிற்சிறு இடைவெளிகளுடன் தொடர் இதமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரில் அனைத்து வீதிகளிலும் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
துவக்க மழையையடுத்து, சில நாட்கள் வெயில் ஒளிர்ந்து - வெப்பம் கலந்த இத வானிலை நிலவிய நிலையில், இன்று நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று பெறப்பட்டுள்ள மழையளவுப் பட்டியல் படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்திலும், குலசேகரன்பட்டினத்திலும் அதிகளவாக 27 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
படங்கள்:
A.S.புகாரீ
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 14:07 / 09.11.2016.] |