ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் & காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், சமுதாயப் புரவலர், பேராசிரியர், தலைமையாசிரியை ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் ஒன்பதாவது பொதுக்குழு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நவம்பர் 04 வெள்ளிக்கிழமையன்று, பழைய ஏர்போர்ட் ரோடு, [அல் நூர் மருத்துவமனை அருகில்], K.F.C. பூங்காவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்வு நாளன்று காலை 10.00 மணி முதல் வரத் துவங்கிய மன்ற உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் தங்கள் வருகையை பதிவு செய்து சிறப்பு குழுக்கள் பரிசின் கூப்பனை பெற்றுகொண்டதோடு அவர்களுக்காக காலை சிற்றுண்டியாக சுண்டல் மற்றும் இளநீர் கடற்பாசி பரிமாறப்பட்டது.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஒன்பதாவது பொதுக்குழு கூட்டம் அபூதபீ காயல் நல மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சென்னை புதுக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் அல்ஹாஜ் அப்துல் மாலிக், சமுதாய புரவலர் நோபல் குழும நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர், துபை காயல் மன்றத்தலைவர் அல்ஹாஜ் J.S.A. புஹாரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ்நஹ்வி. S.A. இஸ்ஹாக்லெப்பை ஆலிம் கிராஅத் ஓத நிகழ்வுகள் இனிதே துவங்கின.
வரவேற்புரை:
மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைத்து நிர்வாக குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அபூதபீ புதிய உறுப்பினர்கள், துபை காயல் நல மன்றத்தின் நிர்வாக, செயற்குழு உறுப்பினர்கள் , மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அனைவரையும் மன்றத்தின் முன்னாள் தலைவரும் எம் மன்றத்தின் காயல் பிரதிநிதியுமாகிய மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அனைவர்களையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர் அறிமுகம்:
மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப். S.A.C. ஹமீது அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை புதுக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் அல்ஹாஜ் அப்துல்மாலிக், சமுதாய புரவலர் நோபல் குழும நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது பற்றிய சிறிய அறிமுகம் வழங்கினார்.
பேராசிரியர் முனைவர் அல்ஹாஜ் அப்துல்மாலிக் புதுக்கல்லூரி வளர்ச்சிக்கும், கல்விக்கும் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்.
புரவலர் நோபல் குழும நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது பற்றி குறிப்பிடுகையில் நமது KMT மருத்துவமனை, தஃவா அமைப்பு போன்ற பல நல்ல காரியங்களுக்கு கேட்கும் போதெல்லாம் பொருளுதவி செய்ததோடு தமிழகத்தில் சமுதாய உணர்வோடு பல நல்ல காரியங்களை பிறர் அறியா வண்ணம் குறிப்பாக வறிய நிலையில் உள்ள உலமாக்களை இனம் கண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மனதில் கொண்டு அவர்களுக்கும் பொருளுதவி செய்தருளும் இம்மகத்தான சேவையை வெகுவாகப் பாராட்டி அமர்ந்தார்.
மன்ற ஆண்டறிக்கை:
மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், மன்றத்தின் செயல்பாடுகளையும் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்ற செயற்குழு உறுப்பினர் பிரபு M.K ரிபாயி அவர்கள் விரிவாக விளக்கினார்.
நினைவுப் பரிசுகள்:
சிறப்பு விருந்தினர் சென்னை புதுக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் அல்ஹாஜ் அப்துல்மாலிக் அவர்களுக்கு மன்ற பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத் அவர்களும், சமுதாய புரவலர் நோபல் குழும நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது அவர்களுக்கு மன்றத்தின் கவுரவ தலைவர் I.இம்தியாஸ் அஹ்மது அவர்களும், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர் அவர்களை பற்றிய அறிமுகத்தை காயல் வினாடி வினா வல்லுனர் L.T.இப்ராஹிம் அவர்கள் தர மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை ஆகியோர் அபூதபீ மன்றத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அல்ஹாஜ் அப்துல் மாலிக் அவர்கள் உரை:
இப்பொதுக்குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் புதுக்கல்லூரில் கல்வி பயின்ற மாணவர்களை இத்தருணத்தில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை இம்மன்றம் தந்தமைக்கு நன்றி கூறி தொடங்கிய பேராசிரியர் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து மேற்க்கோள் காட்டி தேவையறிந்து வறியவர்களின் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்ததை நாம் மனமுவந்து உதவி செய்யும் போது அவர்கள் நமக்காக இறைவனிடம் கேட்க்கும் துஆ என்றும் வீண்போவதில்லை.
இவ்வுலகில் பிறருக்காக நாம் செய்யும் துஆவும் மிகவும் அவசியம் என்பதை எடுத்துரைத்ததோடு அபூதபீ காயல் நல மன்றத்தின் சேவையை உளப்பூர்வமாக பாராட்டி உறுப்பினர்கள் மென்மேலும் சிறப்புற பணியாற்ற வேண்டும் என்று பண்போடு கேட்டுக்கொண்டு, வல்ல ரஹ்மான் நம் யாவருக்கும் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக என்று துஆ செய்து அமர்ந்தார்கள்.
சமுதாய புரவலர் நோபல் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது அவர்கள் ஆற்றிய உரை:
உலமாக்களையும் ,சேவை மனம் கொண்ட நல்லவர்களையும் கொண்ட சிறந்த ஊரான காயல்பட்டினத்திற்கு தாமும் வந்து சென்றதை அன்போடு நினைவில் கொள்வதாகவும், நம்மால் சமுதாய மக்களுக்கு என்ன செய்ய முடிமோ அதை செய்து அல்லாஹுவின் திருப்பொருத்தத்தை அடைய இது போல் மன்றங்கள் ஏற்படுத்தி ஒற்றுமையாக செயல்படுத்தி வரும் இம்மன்ற உறுப்பினர்களை வாழ்த்துவதாவும் மென்மேலும் உங்கள் நலத்திட்ட உதவிகள் மூலம் காயல் ஏழை எளியோர் வாழ்வு மேம்படவும் அதன் மூலம் உங்கள் அனைவர்களுக்கும் இறையருள் சூழவும் இறையோனை பிரார்த்தித்து அமர்ந்தார்கள்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர்:
துபாய் வந்திருந்த தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர் அவர்களை பொதுக்குழுவில் கலந்து கொள்ள மன்றத்தினர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மாலை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முதல் முறையாய் அமீரகம் வந்து இந்த அபுதாபி பொதுக்குழுவில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியையும் ஊரில் இருக்கும் உணர்வும் நம்மூர் பெண்கள் , குழந்தைகளின் சங்கமம் தன்னை வியக்க வைக்கிறது என்றதோடு அடுத்த பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைக்குமெனில் மீண்டும் கலந்துகொள்ளவதாக கூறியதோடு மன்றத்தினற்கு வாழ்த்தையும் ,நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர் அவர்களிடம் - அவர்களது பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவியர் வசதிக்காக நிறைவேற்றப்பட்ட வேண்டிய தேவைகளைச் சுட்டிக்காட்டி, ஆவன செய்யுமாறு மன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
அடுத்து பேசிய தலைமை ஆசிரியை, மாணவ-மாணவியரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கியதோடு, ஊர் வரும்போது பள்ளிக்கு வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார்.
தங்கள் பள்ளியின் நலத்திட்டங்களுக்காக ஏதும் உதவிகள் நாடினால் எமது அபூதபீ காயல மன்றத்தின் சாரபாக உதவிகள் தருவதாய் மன்ற தலைவர் கூற அதை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார்.
உணவு நேர இடைவேளை:
மதிய உணவு நேர இடைவேளையில் காயல் களரி மனம் கம கமக்க நெய்சோறு ,காயல் களரி கரி மற்றும் கத்திரிக்காய் துபாயிலிருந்து பிரத்தியோகமாக சமைக்கப்பட்டு அபுதாபி கொண்டுவந்து கலந்துகொண்ட அனைவர்களுக்கும் சுடச்சுட பரிமாறி உபசரிக்கப்பட்டது.
வினாடி-வினா போட்டி:
உணவு நேர இடைவேளை முடிந்து இரண்டாம் அமர்வில் வழமைபோல் அறிவார்ந்த அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. பத்து நபர்கள் கொண்ட எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தலைப்புகளில் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் மருத்துவம், மற்றும் பொதுஅறிவுக்கான வினாடி-வினாவை காயல் வினாடி வினா வல்லுனர் L.T.இப்ராஹிம் ஆகியோர்களின் தொகுப்பில் 4 சுற்றுக்களாக அமைத்து நடத்தப்பட்டது விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியை மக்கள் தொடர்பு செயலர் A.R. ரிபாய் மற்றும் செயற்குழு உறுப்பினர் சம்சுதீன் அபூபக்கர் ஒருங்கிணைத்தனர்.
போட்டியின் நிறைவில் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹுவாலித் அவர்கள் தலைமையிலான அணி முதற்பரிசையும், K.M.அபூபக்கர் அவர்கள் தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும் பெற்றன.
விளையாட்டு போட்டிகள்:
சிறுவர் சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் ,ஓட்ட பந்தயம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இப் போட்டிகளை துபாய் மன்ற துணைத்தலைவரும் கேம்மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் சாளை சலீம், செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்) மற்றும் சம்சுதீன் அபூபக்கர் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரியோர்களுக்காக சிறியோர் விளையாட்டுகளான சாக்கு ஓட்டம் ,லெமென் ஸ்பூன் போட்டியில் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறுவர்களாகவே மாறியிப்போய் குதூகலம் அடைத்தனர்.
பெண்களுக்கான வினாடி-வினா போட்டி மற்றும் இதர போட்டிகள் அனைத்தும் V.S.T ஷேக்னா லெப்பை அவர்களின் துணைவியார் ஒருங்கிணைப்பில் அணிகளாக பிரிக்கப்பற்று விறுவிறுப்பாக நடைபெற்றது பெண்கள் அனைவர்களும் உற்சாகமாக பங்குபெற்றனர் .வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மீனா சேகர் பரிசுகளை வழங்கினார்கள்.
பரிசுப்பொருள் அனுசரணையாளர்கள்:
குழந்தைகளின் உள்ளங்களை மகிழ்விக்குக்கும் சிறார்களை கவரும் வண்ணம் வித விதமான (GUDDY GIFTS) சிறந்த பரிசுப்பொருள்களை வழங்கி சிறப்பித்த அனுசரணையாளர்களை மன்றம் வெகுவாக பாராட்டியது.
அபூதபீ மன்றத்தின் இலட்சினை & பெயர் பதித்த நினைவுப் பரிசு:
முதன் முதலாக அபூதபீ காயல் மன்றத்தின் இலட்சின் மற்றும் பெயர் பதித்த தேநீர் கோப்பைகள் பொதுக்குழுவில் கலந்து சிறப்பித்த துபை காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள் முறையே துபை காயல் மன்றத்தலைவர் ஜனாப் J.S.A. புஹாரி, ஜனாப் சாளை சலீம், ஜனாப் நூஹு சாஹிப் , ஜனாப் ஈஸா, ஜனாப் யஹ்யா, ஜனாப் பரீத் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர் அபூதபீ மன்றத்தின் இலட்சினை பதித்த T. ஷர்ட்களை லெப்பை தம்பி, இஸ்மாயில், A.R. ரிபாய், சாளை தாவுத் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சி:
போட்டியில் கலந்து வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணைத்து சிறுவர்,சிறுமியர் மற்றும் பெரியோர்களுக்கான பரிசுகளை அபுதாபி மற்றும் துபாய் நிர்வாக அங்கத்தினர்கள் பரிசளித்து மகிழ்வதை படத்தில் காண்க. இறுதியாய் இரண்டு சிறப்பு குழுக்கள் பரிசுகளை இல்லத்தரசிகளே பெற்றுக்கொண்டார்கள்.
நன்றி உரை:
இறுதியாக மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களின் நன்றி உரையில் நாம் நமது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் மக்களின் நலனுக்காக இங்கு ஓன்று கூடியிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு செலுத்தும் சிறு சந்தாவானது ஒரு பெரும் தொகையாக தேவையுடைய பல பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் நம் மக்களுக்காக சேவை செய்யும் நல்ல நோக்குடன் துவங்கப்பட்ட இம்மன்றம் பல சேவைகளை எல்லோரின் ஒத்துழைப்பால் நடத்துவது பெருமைக்குரிய விஷயம் சந்தா தொகைகளை செலுத்தி நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து உங்கள் நல்ல பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாரளமாக தர கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டம் சிறப்புற நடந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், கலந்து சிறப்பித்த மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், துபை காயல் நல மன்றத்தின் நிர்வாக குழு, செயற்குழுஉறுப்பினர்கள், பரிசுப்பொருள்களுக்கு அனுசரணை செய்தவர்கள், பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக பங்களித்த I. இம்தியாஸ் அஹ்மது காக்கா, S.A.C. ஹமீது ,எம்.மக்பூல் அஹ்மத், ஹுசைன் நூருதீன், டாக்டர் H.M. ஹமீத் யாசிர், டாக்டர் செய்து அஹம்மத், L.T.இப்ராஹிம், K. ஹுபைப்,,லெப்பை தம்பி ,இஸ்மாயில், அம்பலம் , A.R.ரிபாயி, புகைப்பட வித்தகர் N.M. சுப்ஹான் பீர் முகம்மது, நோனா அபூஹுரைரா, பிரபு M.K ரிபாயி ,சம்சுதீன் அபூபக்கர் மிக முக்கியமாக காயல் நெய்சோறும் களரியும் குறித்த நேரத்தில் சுவைபட கிடைத்திட உதவிட்ட துபாய் தாவூத் ஹாஜி அவர்களுக்கும், வாகன வசதியும் , பொதுக்குழுக்கான அணைத்து பொருள்களையும் சிரமம் பார்க்காமல் கொண்டுவந்து ஒத்துழைத்த உதவியாளர்களுக்கும் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்து தந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
துஆ - கஃப்பாரா:
விழாவின் இறுதியாய் மவ்லவீ ஹாஃபிழ் A.S.முத்து அஹ்மத் ஆலிம் மஹ்ழரீ அவர்கள் துஆ இறைஞ்ச - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாலை தேனீர்,சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் அனைத்துப் படங்களையும், கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்:-
படத்தொகுப்பு - 1
படத்தொகுப்பு - 2
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்)
(செய்தி & ஊடகத்துறை பொறுப்பாளர்)
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
மக்கள் தொடர்பு செயலர்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத் தலைவர்) |