வார விடுமுறை நாட்களாக இருந்தாலும், இன்றும் - நாளையும் (சனி, ஞாயிறு) காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்படும் என்று, காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அறிவுச் செல்வன் அறிவித்துள்ளார்.
குடிநீர் கட்டணம் - சனி, ஞாயிறு, திங்கள் (நவம்பர் 12, 13, 14) ஆகிய நாட்களில் வசூலிக்கப்படும் என்றும், 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.பொன்வேல் ராஜ்
(சுகாதார ஆய்வாளர், காயல்பட்டினம் நகராட்சி)
|