விடுதலை பெற்ற இந்திய நாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியார் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. இவையனைத்தையும் நீக்கிவிட்டு, அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடுவன் அரசை ஆளும் பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இம்முயற்சியைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினரும் - இதர சமயங்களைச் சேர்ந்தோரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நெல்லை மாவட்டம் - பாளையங்கோட்டை முஸ்லிம் அநாதை நிலைய வளாகத்தில் அலுவலகத்தைக் கொண்டுள்ள “ஷரீஅத் சட்டப் பாதுகாப்புக் குழு” சார்பில், நாளை (நவம்பர் 12 சனிக்கிழமை) கீழ்க்காணும் விபரப்படி ஷரீஅத் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, நெல்லை மாநகர - புறநகர ஜமாஅத்துல் உலமா சார்பிலும், திருநெல்வேலி முஸ்லிம் ஜமாஅத் சட்ட மையம் சார்பிலும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பின்வருமாறு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது:-
அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்திலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், இம்மாநாட்டில் கலந்துகொள்ள பெருந்திரளாகச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நாளை பாளையங்கோட்டையில் நடைபெறும் ஷரீஅத் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வசதியாக, காயல்பட்டினத்தின் பல்வேறு ஜமாஅத்களின் சார்பில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
நஹ்வீ M.M.முத்துவாப்பா & S.M.முஹம்மத் மக்கீ
|