தமிழக அரசின் - இயற்கை இடர்பாடுகள் 2015 - 2016 திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தில் பழுதடைந்துள்ள பல சாலைகளில், நகராட்சியால் கருங்கல் சரல் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.
பரப்பப்பட்டுள்ள கருங்கற்களுக்கு இடையில் கல் துகள்களைப் பரத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழு அளவில் வசதியானதாக ஆக்கித் தருமாறு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் துணை வட்டாட்சியர் அலுவலகம் அமைந்திட - நகராட்சியின் ஒத்துழைப்புடன் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாக உள்ளதாகவும், தேவையான தகவல்களைத் தந்து ஒத்துழைக்குமாறும், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
|