காயல்பட்டினத்திலுள்ள ஸீ-கஸ்டம்ஸ் சாலை உட்பட பல சாலைகள் ஏற்கனவே முற்றிலும் சிதிலமடைந்து, போக்குவரத்திற்குத் தகுதியற்றுள்ள நிலையில், பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழை காரணமாக, அச்சேதங்கள் மேலும் கோரமடைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், அதிகளவில் பள்ளங்களைக் கொண்ட - மழை நீர் பெருவாரியாகத் தேங்கும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு உள்ளிட்ட சாலைகளில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கருங்கல் சரல் பரத்தப்பட்டு, பள்ளங்கள் சரி சமப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளங்கள் சமப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், அவ்வழியே கடந்து செல்லும் வாகனங்களின் பளு தாங்காமல், பரத்தப்பட்ட சரல் கற்கள் சிதறி, மீண்டும் பள்ளம் ஏற்படும் நிலையும், நடந்து செல்வோர் கால்கள் சறுக்கும் நிலையும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
|