காயல்பட்டினம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை, மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கொண்டு, நவம்பர் 14ஆம் நாள் வரை செலுத்தலாம் என நகராட்சியால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு உத்தரவின் அடிப்படையில், தற்போது இந்தக் கால அவகாசம் நவம்பர் 24ஆம் நாள் வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமது 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கொண்டு நகராட்சியில் வரி செலுத்திக்கொள்ளலாம் என்றும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறிவுச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.பொன்வேல் ராஜ்
(சுகாதார ஆய்வாளர், காயல்பட்டினம் நகராட்சி)
|