தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட 15 இடங்களில் ஆதார் நிரந்தர பதிவு சேர்க்கை மையம் செயல்பட்டு வருகிறது.
1. சார் ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி.
2. வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம்.
3. வட்டாட்சியர் அலுவலகம், திருச்செந்தூர்.
4. வட்டாட்சியர் அலுவலகம், சாத்தான்குளம்.
5. வட்டாட்சியர் அலுவலகம், ஒட்டப்பிடாரம்.
6. வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி.
7. வட்டாட்சியர் அலுவலகம், எட்டையாபுரம்.
8. வட்டாட்சியர் அலுவலகம், விளாத்திகுளம்.
9. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி.
10. பழைய மாநகராட்சி அலுவலகம், கிழக்கு மண்டலம், W.G.C. ரோடு, தூத்துக்குடி.
11. மேற்கு மாநகராட்சி மண்டலம், அலுவலக வளாகம், மில்லர்புரம், தூத்துக்குடி.
12. வடக்கு மாநகராட்சி மண்டல சமுதாய நலக்கூடம், முத்தம்மாள் காலனி, தூத்துக்குடி.
13. தெற்கு மாநகராட்சி பழைய பஞ்சாயத்து அலுவலகம், முத்தையாபுரம், தூத்துக்குடி.
14. காயல்பட்டினம் நகராட்சி பஸ் நிலையம் அருகில், காயல்பட்டினம்
15. கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி.
இம்மையங்கள் ஞாயிற்று கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
பொது மக்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் இம்மையங்களுக்கு நேரில் சென்று ஆதார் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.
|