தமிழக அரசின் - இயற்கை இடர்பாடுகள் 2015 - 2016 திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தில் பழுதடைந்துள்ள பல சாலைகள், நகராட்சியால் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தீவுத்தெரு, தைக்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பா பள்ளித் தெரு சந்திப்பிலும், அப்பா பள்ளித் தெருவிலும், வேறு சில தெருக்களிலும் - பள்ளமான சாலைப் பகுதிகளில் கருங்கல் சரல்கள் கொட்டப்பட்டு, சமதளமாக்கப்பட்டன.
அதுபோல, பேருந்து நிலையம் அருகில் - மழை நீர் வடிகாலுக்காக புதைக்கப்பட்டுள்ள குழாய்களுக்குள் சேர்ந்துள்ள மணல் உள்ளிட்ட குப்பைகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையிலுள்ள மழை நீர் வாய்க்காலும் நகராட்சியால் தூர்வாறப்பட்டுள்ளது.
|