காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டு, புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் கடந்த ஜூலை மாதம் துவங்கின. இதற்காக, ஏற்கனவே அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஜமாஅத் / பொதுநல அமைப்புகளுக்கு பின்வருமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், ஒவ்வொரு ஜமாஅத் / பொதுநல அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகளைக் கேட்டு, பின்வருமாறு கடிததம் அனுப்பி வைக்கப்பட்டது:-
அக்கடிதத்தில் கேட்டுக்கொண்ட படி, பல ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் தமது பிரதிநிதிகளைக் கொடுத்த நிலையில், பல்வேறு காரணங்களை முன்வைத்து - அவற்றுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெறும் வரை அவ்வமைப்பில் அங்கம் வகிக்கப்போவதில்லை என சில ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் ஐக்கியப் பேரவைக்குத் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், 6 பேர் கொண்ட சமாதானக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அமைப்பில் இடம்பெறாத ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதற்குப் பின் - கருத்துவேறுபாடு கொண்டிருந்த ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகளுள் ஒருசிலவற்றின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர். மற்றவை கலந்துகொள்ளவில்லை.
அமைப்பில் அங்கம் வகிக்க ஒப்புக்கொண்ட ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளுள் - ஜமாஅத் / அமைப்புக்கு ஒருவர் வீதம் 62 பேரை செயற்குழுவினராக அறிவிக்கப்பட்டு, புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குச்சீட்டு - செயற்குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
08.10.2016. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் கே.எம்.டீ.மருத்துவமனை கூட்டரங்கில் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. 57 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பெருவாரியான வாக்குகளைப் பெற்ற 11 பேர் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், 09.10.2016. ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் கூடி, பின்வருமாறு நிர்வாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்:-
தலைவர்:
எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ
துணைத் தலைவர்கள்:
(1) எஸ்.எம்.உஸைர்
(2) எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ்
(3) தாஜுத்தீன்
(4) மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
செயலாளர்:
வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
துணை செயலாளர்கள்:
(1) ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத்
(2) எஸ்.ஏ.ஜவாஹிர்
(3) எல்.எம்.இ.கைலானீ
பொருளாளர்:
ஜெஸ்மின் ஏ.கே.கலீல்
இணைப் பொருளாளர்:
எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
மேற்படி 11 நிர்வாகிகள் தவிர,
(1) எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி)
(2) ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்
ஆகியோர் அமைப்பின் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்:
P.M.A.ஸதக்கத்துல்லாஹ்
|