சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் (SSF) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட அளவிலான மாணவர் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 30.10.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணி முதல் 17.00 மணி வரை, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற முதல் அமர்விற்கு, அமைப்பின் மாநில தலைவர் மவ்லவீ டீ.பீ.ஹாரிஸ் ஸகாஃபீ தலைமை தாங்கினார். எம்.எச்.புகாரீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஜெஸீமுத்தீன் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் மவ்லவீ எஸ்.முஹம்மத் ஷாஹ் மஹ்ழரீ துவக்கவுரையாற்ற, MOI அமைப்பின் மாநிலதலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “தஸ்கிய்யா - ஒழுக்கத்துடன் வாழ்வதெப்படி?” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மதியம் நடைபெற்ற இரண்டாம் அமர்விற்கு, MOI அமைப்பின் மாநில துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
“அமைப்பின் வரலாறும், வடிவமும்” எனும் தலைப்பில் SSF அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஷபீரலீ உரையாற்ற, தொடர்ந்து நடைபெற்ற நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியில், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க அறிஞர்கள் விளக்கமளித்தனர்.
எஸ்.எச்.மீரா ஸாஹிப் நன்றி கூற, SSF தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.முஹம்மத் அன்வரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளையும், SSF தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹாஃபிழ் என்.எம்.மன்னர் அப்துல்லாஹ் நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.Y.ஜெஸீமுத்தீன்
|