காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் விபரம் அடங்கிய 26 பக்க eBOOK ஒன்று, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, அவ்வமைப்பு சார்பாக வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள், பல ஆண்டு காலமாக காயல்பட்டினம் வழியை புறக்கணித்து செல்கின்றன. இது சம்பந்தமாக - பல்வேறு தருணங்களில் சமர்ப்பிக்கப்பட்ட புகார்கள், நிரந்தர தீர்வினை வழங்கவில்லை.
மே 2016 இறுதியில் துவக்கப்பட்ட நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம், இவ்விஷயத்தில் நிரந்தர தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஓர் அம்சமாக - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக, காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய பேருந்துகள் விபரத்தை நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் கோரியிருந்தது. இந்த விபரங்கள் - தமிழக அரசின் ஆறு பேருந்து கழகங்களிடம் கோரப்பட்டிருந்தது. விழுப்புரம் மற்றும் சேலம் மண்டல கழகங்கள் - காயல்பட்டினம் வழியாக எந்த பேருந்தும் இயக்கவில்லை என தெரிவித்துள்ளன.
எஞ்சிய கழகங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், பெறப்பட்ட வடிவிலேயே இணைக்கப்பட்டு, தற்போது eBook வடிவில் வெளியிடப்படுகிறது.
பொது மக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் புத்தகம் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பொது மக்களிடம் அது வழங்கப்படும் - இறைவன் நாடினால்.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
eBook பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்
|