தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசிக்கும் காயலர்கள் பலர், Bangkok Ball Blasters எனும் பெயரில் கால்பந்து அணியைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு புது முயற்சியாக, சர்வதேச அளவில் தமிழர்கள் மட்டும் பங்கேற்கும் “சர்வதேச தமிழ் தாய் சாம்பியன்ஷிப் கால்பந்துப் போட்டி”யை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
முதலாம் (2016ஆம்) ஆண்டு போட்டிகள் நிகழும் அக்டோபர் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், ஹாங்காங்கிலிருந்து - காயலர்களை உள்ளடக்கிய வி-யுனைட்டெட் கால்பந்து அணி உட்பட பல்வேறு அணிகள் பங்கேற்றன.
நடைபெற்ற இறுதிப் போட்டியில், இப்போட்டியை ஏற்பாடு செய்த Bangkok Ball Blasters அணியும், ஹாங்காங் வி-யுனைட்டெட் அணியும் மோதின. நிறைவில் 4-3 என்ற கோல் கணக்கில் வி-யுனைட்டெட் அணி வென்று, கோப்பையைத் தட்டிச் சென்றது.
இச்சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக, Bangkok Ball Blasters அணியின் எம்.எச்.புகாரீ, சிறந்த கோல் காப்பாளராக - வி.யுனைட்டெட் அணியின் யாஸிர் அரஃபாத், சிறந்த அறிமுக வீரராக - செவன் ஸ்டார்ஸ் அணியின் அன்ஃபஸ் ஹயாஸுத்தீன், அதிக கோல் அடித்த வீரராக - ராம்நாட் வாரியர்ஸ் அணியின் ஹாஷிம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டனர்.
இப்போட்டியை இன்னும் விரிவுபடுத்தி ஆண்டுதோறும் நடத்திட, அதன் ஏற்பாட்டாளர்களான Bangkok Ball Blasters குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
தாய்லாந்து - பாங்காக்கிலிருந்து...
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான் |