தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 31) 16.30 மணிக்குப் பதிவான செயற்கைக் கோள் படத்தின்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடர்த்தியான மேகமூட்டம் காணப்பட்டது.
அந்நேரத்தில் காயல்பட்டினத்தில் கருமேகம் திரண்டு, வெப்ப வானிலை மொத்தமாக மாற்றம் கண்டு, மழைக்கான அறிகுறி நன்றாகத் தென்பட்டது.
16.45 மணியளவில் சிறிது சிறிதாகத் துவங்கி, சுமார் ஒரு மணி நேரம் இதமழை பெய்தது. இன்று (நவம்பர் 01) 04.45 மணிக்குத் துவங்கி, காலை 09.30 மணி வரை, சிற்சிறு இடைவெளிகளுடன் இதமழை தொடர்ந்து பெய்தது.
இன்று 11.00 மணி நிலவரப்படி, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. வெயிலோ, வெப்பமோ இல்லை. சாலைகள் அனைத்திலும் வழமை போல மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
செயற்கைக்கோள் படம்:
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
மழை படங்கள்:
M.T.ஹபீப் (ந.த.)
சாளை நவாஸ்
‘யுனைட்டெட்’ அமீன் |