தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அண்மையில் பெய்யத் துவங்கியது. காயல்பட்டினத்தில் 31.10.2016. முதல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சாரலும், இரவு - நள்ளிரவு நேரங்களில் இதமழை அல்லது தொடர் சிறுமழையாகவும் பொழிந்தவண்ணம் உள்ளன.
இன்று 15.30 மணி நிலவரப்படி, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. வெயிலோ, வெப்பமோ இல்லை. சாலைகள் அனைத்திலும் வழமை போல மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 02.11.2016. அன்று வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 45.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இது மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
03.11.2016. அன்று வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 16.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
|