தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையையடுத்து தென்புறத்தில் திருச்செந்தூர் வரை சுமார் 5 இடங்களில் மழை நீர் வடிகாலுக்காக பெரிய அளவிலான குழாய் கடந்த சில மாதங்களுக்கு முன் பதிக்கப்பட்டது. ஆனால், இப்பணி காரணமாக ஏற்பட்ட மேடு - பள்ளங்களைச் சீரமைக்காத நிலையிலேயே அப்பணி முடிக்கப்பட்டது.
அதன் பின்பு, அங்கு இரு சக்கர - நாற்சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், அப்பகுதிகளில் மேடு - பள்ளங்களை சமப்படுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது. முதற்கட்டமாக, குழாய் பதிக்கப்பட்டுள்ள பகுதியின் இரு புறங்களிலும் சாலை கிளறிவிடப்பட்டிருந்தது. தற்போது கிளறிவிடப்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
|