உங்களின் உண்மையை உரக்கச் சொல்லும் பாங்கு போற்றத்தக்கது...!!! posted bySK Shameemul Islam (Chennai)[19 November 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 44888
காலத்துக்கேற்ற சிந்திக்க வைக்கும் அழகிய சிறிய கட்டுரையை சகோதரி பின்த் மிஸ்பாஹி சிறப்புற வழங்கியுள்ளார்.
முதலில் நான் எழுத்துமேடை உறுப்பினர் என்ற அடிப்படையில் இப்பகுதிக்கு உங்களை என் சக நண்பர்களுடன் உளமார வரவேற்கின்றேன்.
உங்களின் உண்மையை உரக்கச் சொல்லும் பாங்கு போற்றத்தக்கது.
யாரும் யாருக்கும் உதவ முடியா ஓர் உலகைப்பற்றி உண்மையாக உணர்த்தியமை உலக நாடுகளை அரசாட்சி புரிபவர்கள் யாராக இருந்தாலும் இவ்வுலகம் முடிவுற்றபின் துவங்கிடும் மறுஉலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் "மாலிக்குல் முல்க்" என்னும் சர்வலோக அதிபதி முன் தன்னந்தனியே தான் கொண்டுவரப்படுவார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன், அபூஜஹ்ல், வலீத் இப்னு முகீரா உள்ளிட்ட பலரது நிலை பற்றி குர்ஆன் மிகத்தெளிவாக எச்சரிக்கிறது.
செல்வாக்கும் செல்வ செழிப்பும் பதவி பவிசுகளும் கொண்ட அத்தகையோர் தம்மைப்படைத்த மகாவல்லவன் குறித்து துளி அச்சமும் இல்லாமல் போனதால் நினைத்ததை செய்பவர்களாகவும் செய்ததை எண்ணி மகிழ்பவர்களாகவும் இருந்த இறுமாப்பின்போதுதான் உலகிலேயே அழிவை சந்தித்தார்கள். மறுமையோ அவர்களுக்கு இன்னும் கேடாகவே முடியும்.
குர்ஆன் இதுபோன்ற வரலாறுகளை உரைப்பது இன்று உலகில் வாழ்பவர்களுக்கு கடந்தகால கொடுங்கோன்மை மன்னர்களின் நிலை என்னவாயிற்று என்பதை உணர்த்தி படிப்பினை பெறுவதற்கேயாகும்.
எனவே இறை அச்சத்தோடு மன்னிப்பையும் உலகிலேயே தேடுவதால் எப்பேர்ப்பட்ட பாவிகளாக வந்தாலும் மறுமையில் இறைவன் நாடினால் அவர்களை மன்னிப்பான் என்று எழுத்தாளர் கூற மறக்கவில்லை.
மேலும் மக்கள் சமூகம் தம்மிடம் இருக்கும் போது பிறருக்கு கொடுத்து அடுத்தவர் துயர் துடைப்பதுதான் காலத்தால் செய்யும் நல்லறம் என்பதையும் யாரும் வாங்க மறுக்கும் நிலையில் எதைக்கொடுத்து என்ன பயன் என்பதையும் அக்கறையோடு குறிப்பிடுகிறார்.
எழுத்தாற்றல் மேலும் வலுப்பெறவும் சொல் செயல் மூலம் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்வதற்கும் வல்ல ரஹ்மான் அருள்புரியட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross