கலைகளில் ரசனை வேண்டும்...!!! posted bySK Shameemul Islam (Chennai)[19 November 2016] IP: 122.*.*.* India | Comment Reference Number: 44889
கட்டுரை வந்தவுடனேயே கமெண்ட் எழுத எண்ணினேன். கரன்சிகள் படுத்திய பாட்டால் ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை. எனவேதான் இந்த தாமதமான பதிவு.
தம்பி ஹபீபின் காலிகிராபி பதிவின் மூலம் அவரது அறிவின் விசாலத்தையும் விளங்க முடிகிறது.
அல்லாஹ் அவரது அறிவை மேலும் மேலும் பெருக்கி சமூகத்திற்கு பயனாக்கி வைப்பானாக.
கலைகளில் ரசனை வேண்டும். நெளிவு சுளிவு வேண்டும். எழுத்துக்களை, கட்டடக்கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளுக்கும் இது பொருத்தும்.
நீள்வடிவிலோ செங்குத்தாகவோ ஒரு கட்டடம் எழுப்பப்பட்டால் எல்லா காலத்திலும் அதை ரசித்துக்கொண்டே இருக்க முடியாது என்பதற்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடம் ஓர் உதாரணம்.
ஒரு காலத்தில் அதை பார்ப்பதற்காகவே சென்னையை நோக்கி மக்கள் அலை அலையாய் வந்ததுண்டு. ஆனால் இன்று அதை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஏராளமான கட்டடங்கள் சென்னையில் நிமிர்ந்து நிற்கின்றன.
ஆனால் அவைகளும் எத்தனை காலம் மக்களுக்கு அதன் மீதான ஈர்ப்பைத்தரும் என்பது பல லட்ச ரூபாய் கேள்வியாகும்.
சென்னை உயர் நீதிமன்றம், மெட்றாஸ் யூனிவர்சிட்டி, சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய கட்டடங்களை பார்ப்பவர்களுக்கு எத்தனை காலம் கழித்து அதை மீண்டும் பார்க்க நேரிட்டாலும் நிச்சயம் எல்.ஐ.சி.யை பார்ப்பது போல சோர்வு தட்டாது
.
ஆங்கிலேயர் காலத்தில்தான் இவை நிர்மாணிக்கப்பட்டன என்பது உண்மை என்றாலும் அவர்கள் எடுத்தாண்ட கலைநுட்பங்கள் யாவும் முகலாய மன்னர்கள் ஆட்சி காலத்து ரசனைகளாகும்.
கலைகளில் கண்ணியம் கலந்த ரசனைகளை வடிவமைத்தவர் முஸ்லிம்களே.
கலைகளுள் ஒன்றான எழுத்துக்களிலும் ரசனைகளை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே எனலாம்.
ஏனெனில் உலகில் நாகரீகத்தை அறிமுகம் செய்தவர்களாக அடையாளப்படுத்தப்படும் ஆங்கிலேயர்களுக்கும் கூட கிழக்காசியாவிலிருந்து முன்னேறி ஸ்பெயினை தலைமையிடமாகக்கொண்டு ஐரோப்பாவையும் ஆட்சி செய்த முஸ்லிம்களே கலைகளின் முன்னோடிகள் ஆவர்.
அன்றைய காலத்து ஆங்கிலேயர்களுக்கு தினசரி குளிப்பதும் மறைவிடத்தில் கழிப்பதும் கூட ஒரு புதினமாகவே இருந்தன என ஆங்கில எழுத்தாளர்களே ஆச்சரியம் மேலிட கூறுகின்றனர்.
அந்தளவு பேர்பெற்ற முஸ்லீம் மக்களின் வாரிசுகளான நாமோ மூன்று வேலை சாப்பாட்டையம் செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் மட்டுமே கருத்தில் கொண்டு கல்விகற்க நேரிட்டதால் கலைகளின் விலைகூட தெரியாமல் போனதுதான் உண்மை.
விளைவு ஆளுமிடத்திலிருந்து வாழுமிடத்திற்கு சரிந்து இன்று வாழ்வது கூட கேள்விக்குறியாகிப்போன நிலையில்தான் நாம் இருந்து வருகிறோம்.
காலிகிராபி என்பது காலத்தால் மறக்கப்பட்ட ஓர் மகா கலை.
அதை அறியாதவர் மயிலைத் தெரியாமல் காக்கைகளை ரசிப்பதைப் போன்றவரே.
தாஜ்மஹாலின் நான்கு பக்கமும் ஏதோ ஒன்று எழுத்துருவில் இருப்பதாகவே பார்ப்பவர் எண்ணுவர். அவ்வெழுத்துக்கள் அரபு மொழியிலானது என்பதையும் சூரா யாஸீனின் வசனங்கள் முழுவதும் அதில் உள்ளதென்பதையும் எத்தனை பேர் அறிவார்.
கீழிருந்து மேல்நோக்கி பார்க்கும் போது காட்சிகளின் உரு படிப்படியாக மாறி நம் கண்களுக்கு குறைந்தே தெரியும்.
விமானத்தை கீழே நிற்கும் போது பெரிதாக காணும் நாம் அதையே மேலே பார்க்கும் போது சிறியதாகவே காண்கிறோமல்லவா. விமானத்தின் சுருக்கம் அல்ல அது. நம் பார்வையின் சுருக்கமே அது.
எங்கிருந்து எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியான எழுத்து வடிவம் தெரிவது போல பல நூற்றாண்டுகள் முன்பே தாஜ்மகாலில் யாஸீனை வடிவமைத்தார்கள் எனும்போது எத்தனை ஆச்சரியம் நம்முள் மேலிடுகிறது.
கலைகளை உண்மையில் ரசிக்கத்தெரிந்தவன் அவற்றைப்படைத்த கலைஞனையும் ரசிக்கவே செய்வான்.
இவ்வுலகமும் அதில் உள்ளவையும் கலை என்பதை ரசித்துச் சிந்தித்தால் அவற்றைப்படைத்த இரட்சகனாகிய அல்லாஹ் எவ்வளவு ரசனை மிக்கவன் என்பதையும் அவனது அழகும் ரசனையும் படைப்பாற்றலும் எத்தனை சிறந்தது என்பதையும் நினைத்து சர்வலோக அரசனாகிய அல்லாஹ்வை அஞ்சி அடிபணிந்து வாழமாட்டானா என்ன?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross