ஏமாற்றமேதுமில்லை மறுமைவங்கியில் சேமிக்க இம்மையில் மாற்றம் வேண்டும் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[19 November 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 44890
குன் என்ற சொல்லி ஆக்கியவன் அதே குன் என்ற சொல் கொண்டு அழிக்க நேரமாகாது இருந்து நேரம் நெருங்கிவிட்டதாக ஆதார அத்தாட்சிகள் அடையாளங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன
இரவில் கிடைத்த சுதந்திரம் இரவிலேயே போனது அதுதான் உலகம் எதுவும் நிலையல்ல
ஆசிரியவர்களின் விளக்கம் மிகத்தெளிவானவை அல்லாஹ் தனதுமறையில்
99வது அத்தியாயம் அல்ஃஜில்ஃஜாலில் அதிர்ச்சியில் 8வசனங்களாக தெளிவாக விளக்குகிறான் அதை மனிதன் விலக்கிக்கொள்வதாலேயே பெரும் அவதிக்குள்ளாகிறான் இம்மை வெறுமையெனஉணர்ந்து மறுமையை நினைத்தால் அவை ஒன்றுமில்லை
கலீஃபாக்கள் நாணயங்கள் நாணயத்தோடு இருந்தன அவையென்ன உலோகமோ அவற்றின்மதிப்பின்படி படைக்கப்பட்டது
இன்று அச்சடிக்கப்பட்ட வெற்றுக்காகிதங்களும் இணையதள நேரலை (online)வணிகங்களால் உலகமக்கள் நிறையவே பாதிக்கப்பட்டுவிட்டனர் இன்னும் பாதிக்கப்படுவர்
ஒரேவினாடிக்குள் வல்லரசாகும் கனவிலிருக்கும் ஒருநாட்டின் நிதியின் விதிதலைகீழாகமாறிப்போனது விதியைமாற்றப்போவதாக மக்களைவீதிக்குக்கொண்டுவந்துவிட்டது
மஹ்ஷரின்வீதி இப்படியிருக்காது அங்கே அல்லாஹ் நாடியவர்களுக்குமட்டுமே நிவாரணம் கிடைக்கும் அன்றி ஒருதுளித்தண்ணீரும் கிடைக்காது
அஸ்திவாரமேயில்லாத இந்தஉலகக அரசால் நிர்ணயிக்கப்படும் விதிகளுக்குட்பட்டு முப்பது,நாற்பது விழுக்காடுகள் வரிகளாகட்டுகிறோம் ஒரே இரவில் அஸ்திவாரமிழந்தது நம்கையிருப்புகள்
ஆனால் அல்லாஹ் பொறுப்பேற்கும் நமது இருலோகசொத்துசுகங்களுக்காக விதித்த ஏழைவரியாம் இரண்டரை விழுக்காடு வரியைக்கட்ட மனம்மறுக்கிறது
இன்ஷா அல்லாஹ் எஞ்சியிருக்கும் காலத்தில் ஈமானைவலுவாக்குவோம் கொடுக்கப்பட்டகடமைளைகளே நமது உடமைகளாக்குவோம் வல்ல இறைவன் நமதுமடமைகளைப்போக்கப்போதுமானவன் எழவரிகளைக்கட்டுவோம் தர்மங்கள்செய்வோம் வறுமையை ஒழிப்போம் மறுமைக்குசொத்துசுகங்கள்சேர்ப்போம்
விழிப்போடும் இருப்போம்
ஏக நாயன் நமக்கெதிரான சூழ்ச்சிகளனைத்தையும் முறியடித்து பாதுகாத்து நேர்வழியில் நடத்துவானாக ஆமீன்
ஜஃஜாக்கல்லாஹ் கைர் ஆசிரியைஅவர்களே தேவையான காலத்தில் கொடுக்கப்பட்ட அற்புதமான,உண்மையான கட்டுரை வல்ல இறைவன் உங்களுக்கு இருலோகத்திலும் கிருபை,றஹ்மத்செய்வானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross