பிஞ்சுநெஞ்சுகளாம் சகோ செய்யிது இஸ்மாயீல் அவர்களின் இனிய
இளவல் ஃபாத்திமா மற்றும் இளவல் ஹனா ஆகியோரின் உண்டியல் பங்களிப்பை ஆதரிப்பதுடன் வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்
உங்களின் புதியவித்தூன்றலுக்கு வெற்றியைத்தருவதோடு இன் ஷா அல்லாஹ் அனைவர்மனத்திலும் பதியமிடுவான் ஆமீன்
வல்ல நாயன் அல்லாஹ் உங்களையம்,உங்கள்பெற்றோர்,குடும்பத்தினர் அனைவருக்கும் நல,வளங்களை அருள்வதோடு அகத்திலும்,புறத்திலும் இருலோகவெற்றியைத்தந்தருள்வானாக ஆமீன்
இன்னும் உண்டியல் சேமிப்புமுறையை குழந்தைகள்,பெண்கள்மட்டுமல்லாது நாமனைவரும் ஒருவிருப்பவிளையாட்டாகச்செய்தால் இன் ஷா அல்லாஹ் அதில் நமக்கு பறக்கத்தும் இருலோகவெற்றியும்கிடைக்கும் குறிப்பாக நம்மிடமிருக்கும் தீயபழக்கவழக்கங்களான புகைப்பிடித்தல் பழக்கத்திற்குமுற்றுப்புள்ளிவைத்து நிதிசேமிப்பதல்லாமல் ஆரோக்கியமாகவும் இன் ஷா அல்லாஹ் வாழவழிவகைசெய்யும்.
புகைப்பழக்கமுள்ளவர்கள் ஒருநாளைக்கு மூன்று சிகரெட்புகைப்பதைதவிர்த்தால் ஒரேவாரத்தில் குறைந்தபட்சம் சவூதி அரேபியாவின் பதிமூன்றுரியால்களாவதுசேமிக்கமுடியும்
பதிமூன்றுரியால்நமதுநாட்டின்பணத்திற்கு கிட்டத்தட்ட இருநூற்று முப்பதுரூபாய்களாகமதிப்புத்தரும் இந்தமூன்று சிகரெட்களைத்தவிர்ப்பதால் உணவிண்றிதவித்துக்கொண்டிருக்கும் ஒருகுடும்ப உறவிற்கு உங்களைசேமிப்பிலிருந்து இரண்டுமாதத்தில் இன் ஷா அல்லாஹ் ஒருமாத உணவுஉதவிவழங்கமுடியும் அந்த நற்குணத்தை அல்லாஹ் உங்களுக்குவழங்குவான் புகைப்பவர்களையும்,அவர்கள்குடும்பத்தினரையும் நோய்நொடிகளிருந்துக்காது நல்லருள்புரிவான் ஆமீன்
எந்தத்தீயபழக்கத்தையம்மாற்ற ஏதாவது ஒருநல்லபழக்கத்தை எடுத்துக்கொண்டால் வெற்றிநிச்சயம். அது இந்த உண்டியல்ப்பழக்கமாக இருந்தாலென்ன?
முயன்றுபாருங்கள் அல்லாஹ் வெற்றியைத்தரப்போதுமானவன்
எனது இந்த கருத்தை ஒவ்வொரு பொதுக்குழுக்கூடல்களிலும் கருத்துவேளையின்போது வலியுறியுறுத்திவந்திருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் அது இந்த இளவல்கள்வழியில் கசியத்துவங்கியிருக்கிறது இன் ஷா அல்லாஹ் அதைப்பெரும்புரளயமாக வளர்த்துத்தருவானாகஅமீன் அனைவரும் துஆச்செய்துகொள்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross