அறுதல் கூறும் மனமுடன், posted byமுஹம்மதுஆதம் சுல்தான்! (yanbu)[06 December 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44973
துணிச்சல் மிகுந்த வீரப் பெண்மணியை தமிழகம் இழந்தது விட்டது. முதல்வரின் பேரைச்சொன்னாலே பதறித்துடிக்கும் அத்தனை அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தன் சுண்டு விரலில் சுழலவைத்த ஒரு வைர நெஞ்சுறுதியான வீராங்கனை!
கட்சியாலும் ,கொள்கையாலும் நானோ என்னைச்சார்ந்த இயக்கமோ அவர்களுக்கு நேர் எதிர்மறையாக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்ளப்போகும் வேட்டையை ஒரு சாதாரண சிறுமுயல்வேட்டையாக கருதியதில்லை. ஒரு சிங்கத்தை வேட்டையாடப்போகிறோம் என்றுதான் எதிர்கொள்வோம்.அந்த வேட்டையில் சில சமயம் வெற்றியும், சிலநேரம் வெற்றிவாய்ப்பு நழுவியும் இருக்கிரது. அப்படி வெற்றிவாய்ப்பை இழந்த நேரத்தில் நாங்கள் ஒரு சிங்கத்திடம்தாம் வெற்றியை இழந்தோம் என்ற பெருமையைத்தான் அடைந்திருக்கிறோம்! இனி அப்படிப்பட்ட சிங்கத்தை எங்கே தேடுவது?
தன்னுடைய ஆளுமையில் மிகவும் நம்பிக்கைகொண்டவர். தான் எதிர்க்கப்போகின்றவர் இமலாயளவு பலம்வாய்ந்தவராக இருந்தாலும், அதிலிருந்து எழும் எந்த தாக்குதலையும் இலவம் பஞ்சுபோல் ஊதித்தள்ளும் ஒற்றை மனஉறுதி வீரமங்கயை இனி எங்கே பார்ப்பது?
அவர் கொள்கைப்பரப்பு செயலாளராக பதவிபெற்ற பிறகு முதன் முதலில் இடைத்தேர்தல் பிரசாரத்தை நம் காயல் மண்ணிலிருந்துதான் ஆரம்பித்ததாக கேள்வி. அப்படி ஆரம்பித்த நம்மண்ணின் மகிமையால் அவர் வெற்றிப்படிகள் பலதாண்டி புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார் என எண்ணுகிறேன்!
அவர் தற்போது நம்முடன் இல்லை ஆனால் அவருடைய தனிமனித போர்படைத்திறனுடைய பேராற்றல் பல்லாயிர ஆண்டுகள் இப்பரணியில் பரவி புகழ்மணக்க போவது என்பது நிச்சியம்!
மறைந்த முதல்வரின் குடும்பத்தார்களுக்கும்,அவரின் தொண்டர்களுக்கும் என் ஆறுதலடங்கிய ஆழ்ந்த அனுதாபதத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross