Re:..அழகிய முன்மாதிரியல்ல...இன்று செய்திருக்கலாம் . posted bymackie noohuthambi (kayalpatnam )[07 December 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44974
முதல்வர் அவர்கள் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போதே இந்த நிகழ்வு நடைபெற்றது வருந்த தக்கது. எல்லோரும் கண்ணீருடனும் கம்பலையுடனும் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்ரிப் தொழுதுவிட்டு வந்த பிறகும் அந்த காட்சி தொடர்கிறது. ஆனால் நமதூரில் மௌன ஊர்வலம் மாலை 4 .30 தொடங்கியது வேதனை தருகிறது.
நமதூர் வழக்கம் கூட ஒரு ஜனாஸா வெளியூரில் அடக்கப் பட்டாலும் அந்த ஜனாஸா அடக்கப்பட்டு முடிந்த செய்தி வந்த பிறகுதான் ஸலாம் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். காயிப் ஜனாஸாவும் இப்படி தான் நடக்கும். இப்படி இருக்க நமது பாரம்பரியத்தையும் மீறி, ஒரு மக்களின் தலைவர் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும்போதே இப்படி செய்வதற்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியை இன்று மாலை செய்திருக்கலாமே, மிகவும் விஷயம் தெரிந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று பார்க்கும் போது நான்தான் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்றாலும் மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லும் தைரியம் படைத்த ஒரு தலைவிக்கு அஞ்சலி செலுத்தும்போது அவரது துணிச்சல் எனக்கும் வருவதில் வியப்பில்லை.
அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திப்பவர்கள் எனக்கு அறிவுரை கூறுங்கள். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross