செய்தி: தற்பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை கோரி, வ.போ.அலுவலரிடம் பாவலர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முறைப் படுத்தவேண்டியது இது மட்டுமல்ல ஆட்டோ கட்டணமும்தான் posted bymackie noohuthambi (kayalpatnam )[18 December 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44982
பாவலர் சுற்றுலா ஓட்டுனர்கள் நல சங்கம் வைத்துள்ள கோரிக்கை மேலோட்டமாக நியாயமாக தெரிந்தாலும் வாடகைகள் அதிகமாக கேட்பதால் இப்படி ஒரு நிலை இருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஊரில் ஓடும் ஆட்டோக்கள் ஒரு கங்கு கரை இல்லாமால் மக்களின் தேவைகளை அவசரங்களை பயன்படுத்தி அதிக கட்டணம் கேட்கிறார்கள் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். கேட்டால் சாலைகள் சீராக இல்லை என்று சொல்கிறார்கள், பெட்ரோல் டீசல் விலை கூடுதல் என்று பல காரணங்களை சொல்கிறார்கள்.
நேர்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல அது இருவழி பாதை.
YOUR FREEDOM ENDS WHERE MY NOSE BEGINS எவ்வளவு கட்டணமும் கேட்கலாம் இவர்கள் தந்துதான் ஆக வேண்டும் என்று சந்தர்ப்பத்தை வைத்து கட்டணம் வசூல் நடக்கிறது.இது உங்கள் சுதந்திரம் என்றே ஆகி விட்டது, மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். எனவே குறிப்பிட்ட வாகன ஓட்டுனர்கள் மனசாட்சிப் படி கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தாலே போதும் மக்கள் உங்களை நாடி வருவார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை..
வாகன உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் நேர்மையாக நடக்க ஆரம்பிக்கும்போது எல்லாமே சரியாகிவிடும். அது இல்லாத வரை இந்த அவலங்களை மாற்ற முடியாது.
சட்டம் போட்டு மனித உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross