தயவுசெய்து இருசக்கர வாகனங்களில் தூத்துக்குடி திருநெல்வேலி செல்வதையும் வேறு தூரமான ஊர்களுக்கு பயணிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
பஸ்சிலோ அல்லது ட்ரெயினிலோ சென்று, சென்றபின்னர் அந்தந்த ஊர்களிலுள்ள எண்ணிலடங்கா பஸ், ஷேர்ஆட்டோ மற்றும் இதர உள்ளூர் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதே மிக்க பாதுகாப்பானதாக அமையும்.
நாம் சரியாக ஓட்டிச்சென்றாலும் மற்றவர்கள் அங்ஙனம் ஓட்டுவது இல்லை. எதிர்த்து வருபவர்களும் சரி, முந்த நினைப்பவர்களும் சரி, சாலை விதிகளை கொஞ்சமும் மதிப்பதே இல்லை. எல்லோருக்குமே அவசரம், அவசரம்.
அதனால் நொடிப்பொழுதில் நிகழும் அசம்பாவிதம் காலம் கடந்தும் அதன் பாதிப்புகளை நீட்டிச்செல்கிறது.
மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்கள் தாங்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பை காட்டிலும் அதிகம் சிந்திக்கவேண்டிய விஷயங்கள் இவை.
வாகனங்களை சகட்டுமேனிக்கு உற்பத்தி செய்யும் அளவிற்கு நம்நாட்டில் அதற்கான சாலைகட்டமைப்புகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.
இனிமேலாவது மேலும் மேலும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கு அன்புச்சொந்தங்கள் உறுதி மேற்கொள்ளவேண்டும்.
அப்படியே அத்தியாவசிய தேவைகளுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் வாகனம் ஓட்டுவதற்கு முன்னர் ஓத வேண்டிய துஆவையும் வாகனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது கவனத்தை வேறு எங்கும் செலுத்தாவண்ணம் தஸ்பீஹ், திக்ரு, துஆ, இஸ்திஃபார்களையும் ஓதுவதுடன் மிகவும் நிதானமாக செல்லுங்கள் இனியவர்களே.
கருணையுள்ள ரஹ்மான் இதற்குப்பின் யாருக்கும் இதுபோன்ற முடிவுகள் நிகழா வண்ணம் நம்மனைவரையும் பாதுக்காத்தருள் புரிவானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross