செய்தி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யப்படும்! போராட்டத்தைக் கைவிடுக!! தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நீதிமன்ற தீர்ப்பு பிறக்கட்டும் வாடி வாசல் திறக்கட்டும் posted bymackie noohuthambi (kayalpatnam )[20 January 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45144
ஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் விஷயமாக இது மாறி இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் சங்கமிப்பதை பார்க்கும்போது 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம்போல் இது விசுவரூபம் எடுத்துள்ளது.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே
முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு என்ற பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது.
தமிழர்களின் எழுச்சியை பார்த்து மோடி ஆடிப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். என்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதால் அகிம்சையான வழியில் போராட்டம் நடக்கிறது.கர்நாடக போல் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காத போக்கு இங்கே இல்லை. எனவேதான் நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வரவேண்டும். நீதியின் வாசல் திறக்கவேண்டும் வாடி வாசல் வழியே காளைகள் சீறிப் பாய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
ரூபாய் நோட்டு விஷயத்திலும் மாணவர்களுக்கான நீட் NEET விஷயத்திலும் காவிரி தண்ணீர் விஷயத்திலும் தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது என்று பேசிக் கொண்டே இருந்தவர்கள் இப்போது ஜல்லிக் கட்டு விஷயத்தில் தங்கள் உணர்வுகளை எதிர்ப்புக்களை அழுத்தமாகவே பதிவு செய்து வருகிறார்கள். மோடிக்கு தெரிந்து விட்டது தமிழன் சாதுவாகத்தான் இருப்பான் ஆனால் விழித்து எழுந்தால் நமது சிம்மாசனத்தையே சிதைத்து எறிந்து நம்மையும் நமது கட்சியையும் தமிழகத்தில் வேரூன்ற விடமாட்டான் காலூன்ற விடமாட்டான்.என்பதை புரிந்து கொண்டார். இது ஒரு நல்ல சமிக்ஞய் தான். தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.
ஆரிய இனம் திராவிட இனத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். திமுக தாய்க் கழகம். அதிமுக சேய் கழகம். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் . தமிழகத்தின் நலம் என்று வரும்போது இருவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரண்டு ஆடுகள் சண்டை இட்டுக் கொள்ளும்போது வழியும் இரத்தத்தை குடிக்க துடிக்கும் ஓநாய் போல் இருக்கும் பிஜேபியை இனம் கண்டு கொள்ளவேண்டும்.
ஜெயலலிதா மறைந்து விட்டார். கலைஞர் ஓய்வெடுத்துக் கொண்டார். இருபெரும் வசீகர சக்திகள் நம்மிடையே இல்லாதது பெரிய குறைதான். என்றாலும் இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross