இந்த ஏறு தழுவல் அகிம்சையான எழுச்சிப்போரின் எம்போன்ற புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மனதில் நாமும் இந்த அறப்போரில் பங்கெடுக்கமுடியவில்லையே நம்மாலான உதவியை நாம் இறங்கிச்செய்யமுடியவில்லையே என்ற ஒரு தாங்கமுடியாத வலியிருந்தது
இருந்தபோதும் வலைத்தளங்களால் முடிந்த அளவு பின்னியெடுக்கமுடிந்ததை நினைக்கும்போது மனதிற்கு சற்று ஆறுதல் இறைவனுக்கே எல்லாப்புகழும்
தமிழகத்திலும்,உலகெங்கிலும் காளைகளுக்கு இணையாக பெண்சிங்கங்களும் எப்படிகர்ஜித்தன!மாஷா அல்லாஹ்
இவள் நிச்சயமாக முறத்தால் புலிகளை விரட்டியவள்தான் அன்று இன்று அவள் அறத்தால் அதிரவைத்தால் அந்தவீரமும் விவேகமும் அவள்கண்களிலும்,குரலிலும் ஆக்ரோஷத்திலும்
ஆயிரமாயிர அக்னி வேள்விகளைவளர்த்தன.
இந்தவேளைகளில் தம்மை சைவமென்று சொல்லிக்கொள்பவர்களை அவர்கள்
தமது நெறிஇழந்த பேச்சுக்களால் நரமாமிச உண்ணிகளென்று தம்மை ஊடக, உலகரீதியா வெளிச்சம்போட்டுக்காட்டிவிட்டார்கள் பாவம் சிலவாலறுந்த நரிகள்
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
இது தமிழனின் சொல் அதனால் அந்த மக்கள் வெள்ளத்திற்கு தமிழன் சோறும்,நீரும் வழங்கினான் இதிலும் உனது குறுக்குப்புத்தி அது எப்படி முடிந்ததென்று கணக்குக்கேட்கிறாய் வள்ளுவனின் இந்தக்குறளுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்
என்றுசொன்ன வள்ளுவனுக்கு உங்களைப்போல் ஒரு பக்கம்சிலையும் மறுபக்கம் அவன் இனத்தவனுக்கு உலையுயென்று வாழ்பவர்களல்ல தமிழர்கள்.
ஆழிப்பேரலையிலும்,மழைவெள்ளத்திலும்,புயலிலும் தமிழன் தன்னுடைய அடையாளத்தை மேலோங்கச்செய்தான் அதற்கு பலமைல்கற்களாக மேலாக ஒன்றுசேர்ந்து அவனே ஆழிப்பேரலையாகவும்,மழைவெள்ளமாகவும்,புயலாகவும் சீறிக்கிளம்பியிருக்கிறான்
தமிழனின் அடையாளம் காணவேண்டுமா குமரிக்கண்டத்தில் சிந்துவிலும் பாருங்கள் அவன் பாடிய நாகரிக சித்துக்கள் சிந்தும் சீர்களை
உலகவரைபடம் உங்கள் கைகளில்
சிலதலைமுறைகளுக்குமுன் நமது தமிழ்ச்சமுதாய ஒருவருடைய செல்வத்தை அளவிட அவர்களிடம் எத்தனை மாடுகளிருக்கின்றன என்று கணக்குப்பார்த்தே செல்வத்தை அளவிடுவார்கள்.
அதாவது மாடு என்றால் செல்வமென்று பொருள் அதனால்தான் மணமுடித்துவரும் பெண்ணை மாட்டுபெண்ணென்று அழைக்கிறார்கள் செல்வப்பெண் மாடு என்பது எங்களுக்கு இப்பொழுதுவந்த சொந்தமில்லையடா மடையர்களே அது எங்கள் உணர்வோடு உடமையானதடா தென்னம்பிள்ளையும்,இளங்கன்றையும் இனம்கண்டுசொன்னவனடா தமிழன் எந்தமொழியில் பிள்ளையென்றும்,கன்று என்றும் மனித உறவான சொல் உள்ளது அப்படியிருக்குமானால் அதற்கு அடிப்படை தமிழாகத்தானிருக்கும்
மாஷா அல்லாஹ் கட்டுரையின் ஆசிரியர் அழகியமுறையில் சிதையாத இலக்கிய,இலக்கண வழியில் தமிழ்த்தொடர்புகளைத்தந்திருக்கிறீர்கள்
அதற்கு ஒருத்தமிழனாக நன்றியுடன்,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் மப்ரூக்
குடியேறியதைக்களைவோம் குடியுரிமையோடு வாழ்வோம்
நல்ல விதைகளை ஊன்றுவோம், நல்ல உணவுகளை உண்போம்
ஒற்றுமையோடுவாழ்வோம்
இணையட்டும் எழுதுகோல் முனையும்,ஏர்முனையும் பிறக்கட்டும் உலகும் புதியதோர் உலகம் என்றும் தலைநிமிர்ந்து வாழும் தமிழனும்,தமிழுமாக.
ஒன்றே குலம்
ஒருவனே இறைவன்
அவனுக்கே எல்லாப்புகழும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross