Re:...கற்பனை ராஜ்ஜியம் posted bymackie noohuthambi (colombo)[16 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45238
கட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இந்த சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியாடா....
வசந்த மாளிகை திரைப் படத்தில் ஒலிக்கும் பாடல் காதில் கேட்கிறது. ஒரு நிழல் நிஜமாகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டவர்கள் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டவரின் சமாதியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்கள். .கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் பின்பு அப்படி சொன்ன தலைவர்களையே கடவுள் ஆக்கி விட்டார்கள். இதய தெய்வம் என்று சொன்னார்கள் தெய்வத்துக்கு காய்ச்சல் வந்தது என்று சொன்னார்கள் பின்பு அந்த தெய்வம் மீளா துயில் கொண்டார் என்றார்கள் அந்த தெய்வத்துக்கே நீதிமன்றம் 100 கோடி ரூபாய்இ அபராதம் விதித்துள்ளது. அந்த தெய்வத்தின் சொத்துக்களையே பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அவர் ஆன்மா பேசுகிறது என்கிறார்கள். இன்னும் என்னவெல்லாமோ சொல்லப் போகிறார்கள்.
கடவுள் ஏன் கல்லலானான் இந்த கல்லாய்ப் போன மனிதர்களாலே...
பஞ்சைப் போட்டு நெருப்பை அணைப்பவன் பைத்தியக்காரனடா..
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross