Re:...தொலை நோக்கு பார்வை posted bymackie noohuthambi (colombo)[17 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45239
அபுதாபி காயல்நலமன்றத்தின் தீர்மானம் தொலை நோக்கு பார்வையுடன் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காலத்தின் தேவைக்கு கேட்ப சேவைகளின் தன்மைகளும் மாறுகிறது.
நாங்கள் தம்மாம் காயல்நலமன்றத்தினை வழிநடத்தி சென்றபோது குமர்களுக்கு தாலிக்கு தங்க நகை என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால் காலப் போக்கில் அது குமர்களுக்கு உதவி என்ற பரிணாமத்தை தாண்டி உங்களுக்குத்தான் தம்மாம் காயல்நலமன்றத்தின் உதவி திட்டத்தில் நகை கிடைக்கிறதே என்று சிலர் பெண் வீட்டாரை ஏளனப் பேச்சு பேசியபோது, அந்த திட்டத்தை கை விட்டோம். பின்பு கல்விக்கு மருத்துவத்துக்கு என்று எங்கள் உதவிக் கரம் மாற்று வழிக்கு முன்னெடுத்து செல்லப் பட்டது.எனவே கால மாற்றத்துக்கு ஏற்ப நமது அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு அவ்வப்போது உள்ள தேவைகளை சிரமங்களை இனம் கண்டு கொண்டு அதற்கேற்ப நம் உதவிகளை செய்வது நல்ல ஒரு அழகிய முன்மாதிரி. பாஸ்ப்போர்ட் பெறுவதில் உள்ள சிரமங்களை இனம் கண்டு அவற்றை களைவதற்கு மருமகன் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களை தேர்ந்தெடுத்து இருப்பதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதும்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல்
என்பதும் வள்ளுவம் கூறும் பாராட்டு செய்திகள்.
இளைஞர்கள் எல்லோரும் இப்படி மாற்றி சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களின் வாழ்க்கை வளம் பெறும். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross