செய்தி: ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் சந்திப்பு! காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகள் முன்வைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[19 February 2017] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45241
"ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் சந்திப்பு! காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகள் முன்வைப்பு!"
"அரசு மருத்துவமனைக்கு அடுத்த சில நாட்களில் புதிய மருத்துவர்கள் நியமனம்: “நடப்பது என்ன?” நிர்வாகிகளிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்!"
"காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய திட்டத்தின் நடப்பு நிலையைக் கேட்டும், விரைவில் நிதி ஒதுக்கக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னையிலுள்ள இயக்குநரிடம் நேரில் மனு!"
"காயல்பட்டினத்தில் போக்குவரத்துத் துறை காவலர்களைப் பணியமர்த்த, சென்னையிலுள்ள காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் (ADGP) “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நேரில் கோரிக்கை!"
"காயல்பட்டினத்திற்கு ‘108 ஆம்புலன்ஸ்’ வசதி கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு செயலர், திட்ட இயக்குநரிடம் நேரில் கோரிக்கை மனு!"
"பேருந்து 24 மணி நேர கண்காணிப்பின் அறிக்கை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலரிடம் சமர்ப்பிப்பு!"
"பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழையவும், வெளியேறவும் தனி வழி ஏற்பாடு! “நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!"
"ஒருவழிப்பாதையில் இடையூறுகளை நீக்க நடவடிக்கை! “நடப்பது என்ன?” கோரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் உறுதி!"
கடந்த மூன்று நாட்களின் செய்தியாக நமதூருக்காக இந்த "நடப்பதென்ன குழுமம்" என்னென்ன காரியங்களில்லாம் இறங்கி செயலாற்றி வருகிறதென்பதன் பட்டியல்தான் ஒரு மூன்று நாட்கள் செய்திகளின் தொகுப்பாகும்!
நமதூர் ரேஷன் கடைகளின் விநியோக பிரச்சனை முதற்கொண்டு நம் அரசு மருத்துவமனைக்குறியதேவை, சுகாதாரம்,108 ஆம்புலன்ஸ் வசதி சேவை,மற்றும் போக்குவரத்து விழுப்புணர்ச்சி சேவை, போக்குவரத்து காவலர்களை அமர்ததுதல், போக்குவரத்து சீரமைப்புக்குரிய பாதையை தேர்வு செய்து அதை நடைமுறை படுத்துதல் போன்ற ஊர் நன்மைகளுக்குரிய காரியங்களை கோரிக்கைகள் மூலம் முன்னெடுத்து உடனேயே அதன் பலனை பலவற்றை பெற்று,
இனியும் பெறவேண்டிய முயற்சிக்ளில் இறங்கி இங்குள்ள அதிகாரிகளையும் ,தமிழக தலைநகரான சென்னையிலும் அதிகாரிகளை சந்தித்துக்கொண்டிருக்கின்ற அன்பு நெஞ்சங்களாகிய "நடப்பதென்ன" குழும சகோதரர்களே உங்களின் புண்ணியப்பணி தொடரட்டும், உங்களின் தொண்டுள்ள முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியையும் அதற்குரிய கூலியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்பு காயல் நகர மற்றைய தொண்டுள்ளங்களே ,ஊரின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாக விளங்குகின்ற பொது அமைப்பு என்று கூறும் அமைப்புகளே, நீங்கள் ஊர் நன்மைக்காக செய்த தொண்டினை இந்த ஊடகத்தின் மூலமாக மக்களுக்கு தெரிவித்தால் என்ன? நாங்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா? அதோடு எங்களின் ஒத்துழைப்பும் உண்மையாக உழைக்கும் உத்தமர்களுக்கு போய் சேர வழிவகுக்குமல்லவா?
ஒருவேளை நீங்கள் செய்தியை கொடுத்து இந்த ஊடகம் வெளியிட மறுத்ததா?அப்படியென்றால் உங்களின் ஊர்நலப்பணியினை சொல்லுங்கள் மக்களிடம்.வேறு பல ஊடகத்தின் வாயிலாகவோ அல்லது துண்டுபிரசுரத்தின் மூலமாகவோ!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross