செய்தி: நகராட்சியில் கணினி, ப்ரிண்டர் வாங்கியதில் மோசடி: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கைத் துரிதப்படுத்திட - தலைமைச் செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாம்தான் பாவத்தாளிகளா?அல்லது நம் தலையெழுத்தா? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[20 February 2017] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45243
சகோதரர் மக்கி காக்கா அவர்களுக்கு,இந்த ஆட்சிக்கும், ஊழலுக்கும் எதிராக மாணவர்கள் மறுபடியும் களம் இறங்குவார்களா? என்று கேட்டிருக்கிறீர்கள்.
மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் படிக்கத்தான் பள்ளிக்கு செல்கிறார்கள்,இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் அவர்களை வீதிக்கு அழைத்தால் அவர்களின் படிப்பு என்னாகிறது?
தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஒரு வீர விளையாட்டிற்கு இரண்டுவருடங்களாக தடை ஏற்பட்டு மூன்றாவது வருடமும் அதே தடை நீடிக்கும் விதத்தில் செல்லும் நிலைமையை மத்திய அரசு மௌனம் காட்டி அங்கீகரிப்பதோடு,மாநில அரசும் அதற்கு தலையாட்டும் ஒரு தரங்கெட்ட செயல் அரங்கேறுவதை தட்டிகேட்கும் முகமாக, மாநிலத்தின் மானம் மிதமிஞ்சி பறக்கப்போவதை தடுக்கும் முகமாக தாமாகவே மாணவர்கள் முன் வந்து எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் களம் இறங்கி போராடி வென்றார்கள்!
இது தவிர்க்கமுடியாத தலைக்குமேல் போய்விட்ட சம்பவமாகும் அதனால் வீதியில் இறங்கினார்கள் அதற்காக அனைத்து விஷியங்களுக்கும் மாணவர்களை அழைப்பது பொருத்தமாகாது
அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்,அவர்களுக்குத்தானே நாம் ஒட்டு போட்டோம், நாம் ஒட்டு போட்ட எல்லா கட்சிகளும் வெல்லவில்லை,வெற்றிவாய்ப்பற்ற கட்சிகளும் மக்களுக்காக போராடுவது அவர்கள் கடமைதான்!
நடுநிலைமையோடு போராடும் அரசியல் காட்சிகள்,அமைப்புகள் ஆகியோருடன் மக்களும் கலந்து போராட வேண்டியதுதான். வேறு என்னசெய்வது, பட்டவர்த்தனமாக கொள்ளையடித்து
கோலாட்சிசதிகாரமும்,கொலைவெறி கும்பளுக்கு தலைமை ஏற்றும் தாண்டவமாடியவர் இன்று தனிமை சிறையில்
அடைக்கப்பட்டாலும், அவர்தான் தன்னிகரற்றதானைத்தலைவர் என்று தலைவணங்கி அவர் காட்டிய வழியில் ஆட்சியமைக்கும் தலையாட்டும் ஆட்டுமந்தைகளின் ஆட்சி நடக்கும் நாட்டில் வாழும் நாம்தான் பாவத்தாளிகளா?அல்லது நம்தலையெழுத்தா? எப்போது நமக்கு விமோசட்சனம் பிறக்கப்போகிறோதோ எல்லாம் வல்ல அல்லாஹ்தான் அறிவான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross