செய்தி: கோடை விடுமுறை நாட்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம்! நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[20 April 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45481
சிறப்பு வகுப்புகளுக்கெல்லாம் தற்போது வேலையே இல்லை . முன்பு , மருத்துவம் , பொறியியல் படிப்புகளுக்காகவே 12 ம் வகுப்பு பாடத்தை 11 ம் வகுப்பிலேயே எடுப்பதும் , கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்பு என்று பாடாய் படுத்தியதும் இந்த இரண்டு படிப்புகளுக்காகத்தான் . எதுவாக இருந்தாலும் மருத்துவத்தை பொறுத்தவரை அதிக மதிப்பெண் எடுத்தவர் மட்டுமே அதில் சேர முடியும் . பொறியியலில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்ற நிலை . ஆனால் தற்போது நிலைமை வேறு . மருத்துவத்திற்கு நீட் பொதுத்தேர்வு எழுத வேண்டும் . இதற்கு தற்போதுள்ள பாடத்திட்டமோ , சிறப்பு வகுப்புகளோ உதவாது . எந்த மார்க் எடுத்தவரும் பொறியியலில் சேரலாம் என்ற நிலையில் அதற்கும் சிறப்பு வகுப்புகள் தேவையற்றது .
தற்போதைய தேவை நீட் பொதுத்தேர்வுக்கு பயிற்சி கொடுப்பதுதான் . இதிலும் விரும்பியவர்கள் மட்டும்தான் சேர்வார்கள் . நமதூரில் இதுபோன்ற தேர்வுகளுக்கான பயிற்சி நிலையங்கள் இதுவரை இல்லை . கல்வி ஆர்வலர்கள் முன்வந்து துவக்கினால் பயனுள்ளதாய் இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross