செய்தி: ப்ரின்ஸ் வீதியில் “குடும்ப வாழ்வில் உளவியல்” மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி! சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சிறப்புரை!! திரளான மகளிர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆன்மீக தலைவர் vs குடும்பத்தலைவர் posted bymackie noohuthambi (kayalpatnam )[09 May 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45512
ஒரு நாட்டின் பேரரசின் அதிபதி ஒரு பெரிய போர்த்தளபதி ஒரு ஒப்பற்ற ஆன்மீக தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆனால் வீட்டுக்கு வரும்போது உள்ளே நுழைந்தபோது பல் துலக்கி விட்டு மனைவியுடன் பேசி, மற்றவர்களுக்கு முன்மாதிரியைக் காண்பிக்கிறார்கள். இதை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களே சொல்கிறார்கள்.
இரவு முழுவதும் கால் கடுக்க நின்று வணங்கிய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று சொல்லும் நபி தன் மனைவியிடம் நடு நிசி தொழுகை தொழுவதற்கு சம்மதம் கேட்டு அனைத்துக் கணவர்களுக்கும் பாடமாக மாறுகிறார்கள்.
இரவு பகல் தொழுகையும் மஸ்ஜிதுன் நபவியுமாக இருப்பவர்கள், வாழ்க்கையே குர் ஆன் என்று புகழப்படும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகும்போது தனது இறுதி மூச்சை விடவில்லை, ஸஜ்தாவில் இல்லை குர் ஆன் ஓதும்போது இல்லை. தன் கண் தூங்கினாலும் கல்பு (இருதயம்) தூங்கவில்லை என்று பகர்ந்த நபிகளாரின் வஃபாத், அவர்களது மனைவி ஆயிஷா அம்மையார் அவர்களது மடியில் படுத்திருந்த நிலையில் நிகழ்ந்ததிலும் நமக்குப் படிப்பினையுண்டு. பல நாட்கள் உண்ணாமல் இருந்தவர்கள் உணவு கிடைத்தவுடன் சாப்பிடுகிறார்கள் அவர்கள் கடித்த கறியை அந்த இடத்திலிருந்து கடித்து தனது உணவை சாப்பிட ஆரம்பிக்கும் ஒரு நபியின் மனைவி....வியக்க வைக்கும் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து விட்டு நமக்கும் இதை எல்லாம் முன்மாதிரியாக வெளியில் சொல்லி விட்டு நம்மையும் அதை பின் தொடர்ந்து செய்தால் வாழ்க்கையில் வெற்றி என்பதையும் சொல்லி சென்றிருக்கிறார்கள்.
இப்போது புதிதாக ஓர் பேஷன்....அதன் பெயர் COUNSELLING .நாலு சுவர்களுக்குள் நடக்கும் செய்தியை ஊரறிய செய்து அதை மற்றவர்கள் அறிந்து whattsupp facebook..என்று உலகமே பேசும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. SEX பேசுவதே பாவம்போல் சொல்லப்படும் இந்தக் காலம் அல்லது SEX பேசுவதே ஆளுமை என்று பேசப் படும் நாணயத்தின் மறுபக்கம்.
இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறது நபிகள் நாயகம் அவர்களின் இல்லற வாழ்க்கை. வீட்டுக்கு வெளியே மன்னர் வீட்டுக்குள் நுழைந்தால் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும் ஓர் அன்பான கணவர்... இவற்றை மிக அருமையாக கோடிட்டுக் காட்டி சென்றுள்ள ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக.
மணவிலக்குகளுக்கு காரணம் மனம் விலகி இருப்பதுதான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கை வரலாறில் மிக பெரிய COUNSELLING இருக்கிறது...அவர்கள் வாழ்வை வாசிப்போம் அவர்கள் வாழ்வை நேசிப்போம் அவர்கள் வாழ்ந்தபடி வாழ யோசிப்போம். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross