Re:... posted byVilack sma (jeddah)[08 May 2017] IP: 176.*.*.* Ukraine | Comment Reference Number: 45511
" குப்பை சேகரிப்பு வரி " , எதற்கான செலவினங்களை ஈடுகட்டுவதற்கு ?
சமீபத்தில் ஊர் வந்திருந்தபோது ஏகப்பட்ட துப்புரவு பணியாளர்கள் ( அனைவருமே புதியவர்களாகவே தெரிந்தார்கள் ) விசில் அடித்துக்கொண்டு , முடுக்கு முடுக்காக சென்று ஒவ்வொரு வீட்டிலுமாக குப்பைகளை சேகரித்து , பிறகு அதை நகராட்சியின் குப்பை அள்ளும் லாரியில் கொடுத்தார்கள் . ஒருவேளை இந்த பணியாளர்களுக்கான சம்பளங்களை ஈடுகட்டுவதற்காகத்தான் இந்த புதிய " குப்பை சேகரிப்பு வரி " என்றால் " நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுள்ளோம் " என்பதுதான் உண்மை .
குப்பை அள்ளும் லாரி பல்வேறு நேரங்களை ஒவ்வொரு பகுதிக்குமாக ஒதுக்கி , தினமும் அந்தந்த நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று , காது கிழியும் அளவிற்கு ஹாரன் அடித்துக்கொண்டு வருகிறார்கள் . நேரிடையாக கொடுக்கும் குப்பைகள் , மற்றும் நகராட்சியால் வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் போடப்படும் குப்பைகளை எடுத்து செல்கிறார்கள் . நம்மில் எத்தனை பேர் லாரியில் வரும் பணியாளர்களிடம் நேரிடையாக குப்பையை கொடுக்கிறோம் ? குப்பை வாளியை கையில் தூக்கிக்கொண்டு வருவது நம்மவர்களுக்கு கௌரவக்குறைச்சல் . அதனால் லாரி சென்ற பிறகு , வீட்டில் வேலைக்காரி வந்ததும் அவரிடம் கொடுத்து , தெருவில் விசிறி அடிப்பது , அல்லது அடுத்தவன் வீட்டு வாசலில் எரிந்து விட்டு வருவது . இதுதான் இப்போது நடக்கிறது . பலமுறை சொல்லிப்பார்த்தாயிற்று . செவிடன் காதில் ஊதிய சங்கு . ஊர் நாறாமல் இருக்க மாற்று ஏற்பாடாகத்தான் வீடு வீடாக சென்று குப்பை அள்ளும் முறையை கொண்டுவந்தார்கள் . இவர்களுக்கான சம்பளம் எந்த கஜானாவில் அள்ளுவது ?
ஒருவேளை இவர்களுக்கான சம்பளத்திற்காகத்தான் " குப்பை அள்ளும் வரி " என்றால் அது நியாயமானதே . ( குப்பையை லாரியில் கொடுப்பதால் நம்மவர்களுக்கு கௌரவக்குறைச்சல் ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறதே என்று சந்தோசப்படுங்கள் )
" குப்பை வரி " ஏன் என்று கண்டனம் தெரிவிப்பதைவிட , குப்பையை அடுத்தவன் வீட்டு வாசலில் வைப்பவர்களுக்கும் , குப்பை லாரி சென்றபிறகு குப்பையை தெருவில் விசிறி அடிப்பவர்களுக்கும் கண்டனம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் .
மேலும் குப்பைகள் என்பது எந்த வகையானது என்பதையும் வரைமுறை படுத்த வேண்டும் . பெரும்பாலும் சமையலறை கழிவுகள் , நாப்கின்கள் , பார்சல்கள் பிரிக்கும்போது வரும் பேப்பர்கள் , அட்டை பெட்டிகள் போன்றவர்கள்தான் குப்பைகள் என்ற லிஸ்டில் வரும் . ஆனால் ஒருசிலர் வீட்டில் உடைத்தெடுக்கப்படும் கற்கள் , தோட்டத்தில் வெட்டப்படும் மரங்கள் போன்றவற்றை தெருவில் கொட்டி செல்கின்றனர் . இவைகள் குப்பைகள் லிஸ்டில் வராது . நகராட்சி பணியாளர்கள் இதை எடுக்கவும் மாட்டார்கள் . சம்பந்தப்பட்டவர்கள்தான் கூலிக்கு ஆட்கள் வைத்து இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross