காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் சேரும் குப்பைகளைச் சேகரிக்க, நகராட்சியின் சார்பில் புதிதாக வரி அறிமுகம் செய்யப்படுவதை – மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கண்டித்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மனித நேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முகம்மதுநஜிப் முன்னிலை வகித்தார், மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் ராஸிக் முஸம்மில் வரவேற்புரையாற்றினார். மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc. அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக நகர செயலாளர் S.M.ஜிப்ரி நன்றி உரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு கிளையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் தைமிய்யா அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி எடுத்துரைத்தார் மேலும் நிர்வாகிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
1.தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
2.கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
3.தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
4.காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் குப்பை சேகரிப்பதற்கு புதிதாக வரி விதித்திருப்பதை கண்டிக்கிறோம் . இந்த வரியை திரும்ப பெற வேண்டும், இல்லாத பட்சத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகராட்சி முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)
தூத்துக்குடி மாவட்டம்.
|