காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் பின்புறமுள்ள ப்ரின்ஸ் தெருவில், 01.05.2017. திங்கட்கிழமையன்று 18.30 மணிக்கு, “குடும்ப வாழ்வில் உளவியல்” எனும் தலைப்பில், மகளிருக்கான சிறப்பு உளவியல் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி – சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.
ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ அஷ்ஷெய்க் மன்ஸூர் காஷிஃபீ இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உள வள ஆலோசனைகளை வழங்கினார்.
ஏற்பாட்டாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மகளிருக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 மகளிரும், திரளான ஆண்களும் பங்கேற்றனர். ஆண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
|