சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்றம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்புகள் இணைந்து, 06 முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவியருக்கான கைவினைப் பொருட்கள் உருவாக்கல் & கதை சொல்லல் பயிற்சி முகாமை இன்று 08.30 மணி முதல் 17.00 மணி வரை காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றன.
மொத்தம் 60 மாணவியர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையிலான இம்முகாமிற்காக - காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு ஏற்கனவே கடிதம் அளிக்கப்பட்டு, அதனடிப்படையில் முன்பதிவுகளும் முடிவுற்றுவிட்டன.
கலந்துகொள்ளும் மாணவியருக்கு நிகழ்விடத்திலேயே மதிய உணவுக்கும், தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விபரப் பிரசுரம்:-
தகவல்:
சாளை பஷீர் & ஃபஸல் இஸ்மாஈல்
(ஒருங்கிணைப்பாளர்கள்)
|