இல்லற வாழ்வில் இன்றைய கணவன் – மனைவியர் சந்திக்கும் பிரச்சினைகளை – இஸ்லாமிய வழிகாட்டு நெறியின் அடிப்படையில் அலசும் நோக்கில், ”மணவாழ்வு மணக்க...” எனும் தலைப்பில், குடும்ப வாழ்வியல் கலந்தாய்வு நிகழ்ச்சி, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு ஹமீதிய்யா பெண்கள் தைக்காவில் 10.05.2017. புதன்கிழமையன்று 19.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஏ.சித்தி லரீஃபா ஸித்தீக்கிய்யா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதாகவும், அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
|