ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றம் சார்பில், மீன் வணிகம் செய்யும் - காயல்பட்டினம் பரிமார் தெரு வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 05.05.2017. வெள்ளிக்கிழமையன்று 17.30 மணியளவில், பரிமார் தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், அதன் அங்கத்தினரான விளக்கு பஷீர், எம்.ஏ.எஸ்.ஜரூக், அபூதபீ காயல் நல மன்றத்தைச் சேர்ந்த ‘துணி’ உமர் அன்ஸாரீ, பீ.எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், தாய்லாந்து காயல் நல மன்றத்தைச் சேர்ந்த எம்.எச்.அபுல் மஆலீ, இலங்கை காயல் நல மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எம்.டீ.மருத்துவமனை செயலாளர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி எஸ்.இப்னு ஸஊத் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
முதற்கட்ட உதவியாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பரிமார் நலச் சங்க செயலாளர் ஜெய்லானீ, நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.இஸ்மாஈல் ஆகியோரிடம் துபை காயல் நல மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், பரிமார் நலச் சங்கம் & கடைப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, காயல் துபை நல மன்றச் செயலாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் ஒருங்கிணைப்பில், பரிமார் நலச் சங்கத் தலைவர் செய்யித் அஹ்மத் ஜெ.பீ., அதன் அங்கத்தினரான ஷபீர், அப்துல் காதிர், காஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
KaliTAS
|