தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. அதன்படி, வெளியூர் பள்ளிகளில் பயின்று, 1150க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற – காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களது விபரம் வருமாறு:-
(1) காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சேர்ந்த – ஐக்கிய அரபு அமீரகம் அல்அய்னில் பணியாற்றி வரும் பொறியாளர் முஹம்மத் ரஈஸ் – தமீமா தம்பதியின் மகனும், ‘ஐந்து லட்சம்’ ஏ.எஸ்.எம்.மரைக்கார், அஹ்மத் பஷீர், ஜீனத், தாஹா ஆகியோரின் பேரனுமான அஹ்மத் பஷீர் என்ற மாணவர் சென்னை பொன்னேரி வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் பயின்று, 1200க்கு 1173 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவரது மதிப்பெண்கள்:
தமிழ்: 197; ஆங்கிலம்: 185; இயற்பியல்: 200; வேதியல்: 197; உயிரியல்: 200; கணிதம்: 194.
தகவல்:
துபையிலிருந்து...
M.S.அப்துல் ஹமீத்
காயல்பட்டினத்திலிருந்து...
‘துணி’ உமர் அன்ஸாரீ
(2) காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த – சென்னையில் மருத்துவப் பணியாற்றி வரும் டாக்டர் செய்யித் இஸ்மாஈல் – ஓ.எம்.எஸ்.ராபியத்துல் அதவிய்யா தம்பதியின் மகனும், காயல்பட்டினத்தில் பல்லாண்டுகள் மருத்துவப் பணியாற்றிய டாக்டர் அபூபக்கர் என்ற டாக்டர் அபூ – தீவுத்தெருவைச் சேர்ந்த ஒளி ஹாஜியார் ஆகியோரது பேரனுமான எஸ்.ஐ.முஹம்மத் அபூபக்கர் என்ற மாணவர் சென்னை மியாஸி மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் பயின்று, 1200க்கு 1160 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவரது மதிப்பெண்கள்:
தமிழ்: 188; ஆங்கிலம்: 185; இயற்பியல்: 196; வேதியல்: 199; உயிரியல்: 192; கணிதம்: 200.
தகவல்:
சென்னையிலிருந்து...
டாக்டர் செய்யித் இஸ்மாஈல் |