தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் இம்மாதம் 13, 14 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.
டாக்டர் உமர் தலைமை தாங்க, அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் அபுல்ஹஸன், இஸ்மாஈல், அப்துர்ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதன்போது, சுமார் 1500 பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
தமுமுக, மமக, சமூகநீதி மாணவர் இயக்கம் ஆகியவற்றின் தூத்துக்குடி மாவட்ட – காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும் அங்கத்தினரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
|