விருதுநகர் மாவட்டம் வீரசோழன் என்ற ஊரில் இயங்கி வரும் ஃகைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் – முத்து மொகுதூம் ஃபாத்திமா தம்பதியின் மகன் ஹாஃபிழ் எம்.எஸ்.மஹ்பூப் ஸுப்ஹானீ என்ற மாணவர், 5 ஆண்டுகள் பயின்று ஆலிம் பட்டம் பெற்றுள்ளார். மேலும் ஆலிம் கல்வியுடன், பி.காம். பட்டப்படிப்பையும் அவர் முடித்துள்ளார்.
14.05.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணியளவில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இவருக்கும் – இவருடன் இணைந்து பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ‘ஆலிம் ஃகைரீ’ ஸனது (பட்டம்) வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எம்.அப்துல் காதிர் பாக்கவீ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
இக்கல்லூரியில் பயின்று ‘ஆலிம் ஃகைரீ’ ஸனது பெறும் மூன்றாவது மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸனது பெற்ற மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஈஸா ஃகைரீ சென்னையில் இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
மாணவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.மஹ்பூப் ஸுப்ஹானீ, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவில் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றவர். ஹாமிதிய்யா பைத் பிரிவினர் இவரது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வீரசோழன் சென்று, பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்றதோடு, காயல்பட்டினம் திரும்பியதும் நகர்வலமாக அழைத்துச் சென்று அவரது இல்லத்தில் சேர்த்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.ஈஸா ஷஃபீக் |