தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில், “சிகரத்தை நோக்கி” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில், “சிகரத்தை நோக்கி” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி 07.05.2017. ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளி எதிரிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தின் ‘ஹனியா’ சிற்றரங்கில் நடைபெற்றது.
சமூகநீதி மாணவர் அமைப்பின் நகர செயலாளர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.இப்னு ஸஊத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சமூகநீதி மாணவர் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஜெ.செய்யித் அஹ்மத் இர்ஷாத் வரவேற்றார். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
‘விழி’ அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா, இளையான்குடி ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” எனும் தலைப்பில் வழிகாட்டு உரைகளாற்றினர்.
சமூகநீதி மாணவர் இயக்க மாவட்டச் செயலாளர் அ.பரக்கத்துல்லாஹ் நன்றி கூறினார். அதன் நகர பொருளாளர் ஆர்.நூருல் ஆரிஃப், 15ஆவது வார்டு செயலாளர் ஷவுக்கத் அலீ, தமுமுக ஊடகப் பிரிவின் சார்பில் எம்.என்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
இதன்போது, தமுமுக சிறந்த மாவட்ட நிர்வாகிக்கான விருது – மாவட்டப் பொருளாளர் காதருக்கும், சிறந்த நகர நிர்வாகிக்கான விருது காயல்பட்டினம் எஸ்.டீ.செய்யித் இப்றாஹீமுக்கும் வழங்கப்பட்டது.
கால்பந்து விளையாட்டில் மாநில அளவில் விளையாடத் தகுதி பெற்றுள்ள எல்.கே.மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில், நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் “உயர்கல்வி வழிகாட்டி” நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தகவல்:
முஹ்ஸின் (முர்ஷித் ஜெராக்ஸ்) & இர்ஷாத் |