Re:.மரைக்கார் பள்ளி இமாமின் மனைவி காலமானார்! posted byசாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (காயல்பட்டணம்.)[29 May 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45574
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
ان لله وان اليه راجعون
மர்ஹூமா அவர்கள் என் மனைவியின் பெரிய உம்மா என்பதால் எனக்குமாமிஆவார்கள்.
சிரித்த முகத்துக்குச் சொந்தகாரர்கள்.
இறையச்சம் மிகுந்த இபாதத்தாளி.
குடும்பத்தினர்களுக்கும் ,
அயல் வீட்டார்களுக்கும்,ஒட்டு மொத்த
சுற்று வட்டாரத்தினர்களுக்கும்,
தன்னலம் எதிர் பாரமல் ஆற்றிய சேவைகள் எண்னிலடங்காதவை.
பிரச்சனைகளை தன் விவேகமிக்க நுண்மதியால் சீர்படுத்தும் பக்குவமிக்கவர்கள்.
யா அல்லாஹ்! இவர்களின் சேவைகளை
ஏற்றுக் கொள்வாயாக.
பல நூறு வருடங்கள் பலன் தந்து கொண்டிருக்கும் மிகப் பெரும் மரம் அழிந்தால் அம்மரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பறவைகளுக்கு
ஏற்படும் பேரிழப்பைபோன்ற பாதிப்பாகும் அன்னாரின் குடும்பத்தாரகளுக்கும், வட்டார வாசிகளுக்கும்.
யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல்
இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும்
கொடுப்பாயாக!
யா ரஹ்மானே !
இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!.
மொகுதும்தெரு சாளையார் குடும்பத்தினர்கள் சார்பாக
சாளைM.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி.
காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross