Re:... posted byNUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA)[29 May 2017] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45575
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சித்தி லாத்தா அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. சிறந்த சமூக நலப்பணிகள் சப்தமில்லாமல் ஆற்றிய பல்வேறு பணிகள் நிழலாடுகிறது .குடும்பத்தின் சிறு சிறு சரச்சரவுகளை சாதுரியமாக பேசி தீர்த்து குடும்பங்களை ஒன்றிணைத்த வீராங்கனை.யார் அழைத்தாலும் வறியவர் பணக்காரர் என்று பார்க்காமல் ஓடோடி சென்று உதவும் உத்தம பெண்மணி.
நான் கூட ஊர் வரும் போது இந்த பெண்மணி ரொம்ப கஷ்ட படுகிறாள்.அவளின் சிறு தொழில் அல்லது மருத்துவத்திற்கு ஏதாவது தா என்று வாங்கி கொடுத்த நல்ல உள்ளம்.தனக்கு என்று எதுவும் கேட்காமல் வறியவர்களுக்கு சொல்லப்போனால் வீடு கட்டி கொடுக்கும் அளவுக்கு எல்லா மக்களிடமும் வசூலித்து தன்னால் முடிந்த பொருளுதவியும் போட்டு கட்டி கொடுத்த சமூக சேவகி. கல்யாண வீடுகள் கலகலப்பாக திகழ மகிழ்வுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்திய தாய். அன்னாரின் சேவை தொடரும் மீண்டு வருவார்கள் என்று எண்ணினேன். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை .போதும் என்னளவில் வந்துவிடு என்று இந்த புனித ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை தன்னளவில் அழைத்து கொண்டான். அல்லாஹ்வின் கட்டளை.ஸபூர் செய்து கொள்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன் .
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .
கனத்த இதயத்துடன் ரியாத்தில் இருந்து நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை .
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross